அழகான முகத்திற்க்கு பப்பாளி எண்ணெய் தயார் செய்வது எப்படி …?

November 25, 2022 at 7:37 am
pc

பப்பாளி ப்பழம் சரும நிறத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றுவதை நீங்கள் அறிவீர்கள்.ஆனால் என்ன.. !!பப்பாளி பழம் எப்போதும் கிடைப்பதில்லை..இனி பப்பாளி ப்பழம் கிடைக்கும் போதே நீங்கள் இந்த எண்ணெயை செய்து வைத்தீர்கள் என்றால் எப்பொழுதும் உங்களை அழகு படுத்தலாம்…

தேவையான பொருட்கள்

இரசாயன கலப்பற்ற பப்பாளி
தூய தேங்காய் எண்ணெய்.

செய்முறை

நன்கு பழுத்த பழமொன்றை எடுத்து முதலில் நன்கு கழுவிக்கொள்ளவும். (பால் நீங்கும் வரை )
தேவையான அளவு பப்பாளி பழத்தை தோலோடு மிக சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும் (விரும்பினால் சில விதைகளை சேர்க்கலாம் -விதைகள் முகப்பருக்கள் மற்றும் அழற்சிகள் வருவதை தடுக்கும் ).
இதை அடுப்பில் வைத்து பழத்துண்டுகள் மூழ்கும் வரை எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.


மெல்லிய தீயில் வைத்து பழத்துண்டுகள் பொறிபடும் பதம் அளவு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
பழத்துண்டுகளை நசிக்க வேண்டாம்.
ஆறியவுடன் வடியொன்றில் கலவையை ஊற்றி மெதுவாக வடிய விடவும்.


ஆரஞ்சு கலர் அழகான எண்ணெய் தயார் (நீங்கள் எடுக்கும் பழத்தை பொறுத்தே நிறம் வரும் )

பூசும் முறை :

இரவில் தூங்கும் முன் நன்கு கழுவி துடைத்த முகத்தில் மற்றும் கழுத்தில் நன்கு பூசி சில வினாடிகள் மசாஜ் செய்து விடுங்கள். காலையில் கழுவிவிடலாம்.

பகலில் பூசி மசாஜ் செய்து பின் பயறு மா போட்டு கழுவி கொள்ளலாம்

பயன்கள் :
  • சரும சுருக்கங்களை நீக்கும்
  • வயதாகும் போது முகத்தில் தோன்றும் கருந்திட்டுக்களை நீக்கும்
  • வெய்யிலினால் தோன்றும் கருமையை நீக்கி முகத்தை பொலிவாக்கும்.
  • கண்ணின் கருவளையம் மற்றும் உதட்டின் வறட்சியை நீக்கும்
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website