அழகா இல்லாத ஹீரோயின் எதற்கு? நிருபரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த இயக்குநர்..பாராட்டிய மஞ்சிமா மோகன்


ஜிகர்தண்டா 2 படத்தில் அழகாக இல்லாத ஹீரோயினை நடக்க வைத்ததன் காரணம் என்ன என்ற நிருபரின் கேள்விக்கு, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதிலடி கொடுத்தார்.
ஜிகர்தண்டா 2
சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்காக படக்குழு வெற்றி விழாவை கொண்டாடினர். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர்கள் மற்றும் இயக்குநர் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
நிருபரின் கேள்விக்கு பதிலடி
அப்போது நிருபர் ஒருவர், ‘சித்தா படத்தில் வேற லெவலா நடித்த ஹீரோயின் பாக்கறது அவ்வளவு அழகா இல்லானாலும், அவங்களோட நடிப்பு வேற லெவல்ல இருக்கும். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்ல அவங்கள fix பண்ணத்துக்கான காரணம் என்ன? எப்படி அவர்கள வேலை வாங்குனீங்க?’ என கேட்டார். அதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்பராஜ், ‘அழகா இல்லனு நீங்க எப்படி சொல்றீங்க? அது உங்களோட மைண்ட் செட்னு நினைக்கிறேன்’ என்று பதிலடி கொடுத்தார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை மஞ்சிமா மோகன், ‘யாரோ ஒருவர் அப்படி ஒரு கருத்தை கூறியதை என்னால் நம்ப முடியவில்லை! ஆனால், கார்த்திக் சுப்பராஜ் நீங்கள் நன்றாக சொன்னீர்கள்’ என தெரிவித்துள்ளார்.