அவதார் 2 திரைப்படம் -3 நாட்களில் ரூ.3,600 கோடி வசூல்

December 19, 2022 at 3:37 pm
pc

ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட இயக்கத்தில் அவதார் 2 திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 55,000 திரையரங்குகளில் வெளியானது. கதை மற்றும் திரைக்கதையின் அடிப்படையில் கலவையான வரவேற்பைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் படம் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. 3 நாட்களில் சுமார் ரூ. 3,600 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக திரையுலக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 3 நாட்களுக்குள் மற்றொரு ஹாலிவுட் படமான ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ மொத்த வசூல் சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 131-133 கோடி வசூலித்ததாக தெரிகிறது. இந்திய அளவில் ரூ.126 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையை ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ பெற்றிருந்தது. அந்த சாதனையை ‘அவதார் 2’ வெறும் மூன்று நாட்களில் முறியடித்து மேலும் பல சாதனைகளை நோக்கி படையெடுக்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website