அவதார் 3 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

August 13, 2024 at 12:47 pm
pc

ஹாலிவுட் பிரபல இயக்குனர் ஆன ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு மாபெரும் பொருட் செலவில் உருவான திரைப்படம் அவதார். வெளியான சமயத்திலேயே அதிகபட்ச வரவேற்பை அவதார் திரைப்படம் பெற்றது. தொடர்ந்து அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2.9 பில்லியன் யு எஸ் டாலர்களை வசூல் செய்தது. அந்த வசூலை இப்பொழுது வரை எந்த ஒரு திரைப்படத்தாலும் முறியடிக்க முடியவில்லை. இந்த படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்டபோது இதை ஐந்து பாகங்களாக எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் படத்தின் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு அவதார் படத்தின் இரண்டாம் பாகமான வே ஆஃப் வாட்டர் என்கிற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் 2.3 பில்லியன் டாலர் வசூல் செய்தது. இந்த நிலையில் அவதார் படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்டு 2020ல் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

அதன் வி.எஃப்.எக்ஸ் வேலைகள்தான் தற்சமயம் நடந்து வருகிறது அவதார் திரைப்படத்தை பொறுத்தவரை பாதிக்கு பாதி வி.எஃப்.எக்ஸ் வேலைகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த நிலையில் 2025 டிசம்பருக்கு கிறிஸ்மஸை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த படங்களின் வெற்றியை பொறுத்துதான் அடுத்த இரண்டு பாகங்களை இயக்க இருப்பதாக ஜேம்ஸ் கேமரூன் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று அவதார் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கு ”அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்” பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதை தமிழில் அவதார் நெருப்பு மற்றும் சாம்பல் என்று கூறலாம். இரண்டாம் பாகத்திற்கு வே ஆஃப் வாட்டர் என்று வைத்திருப்பதால் படத்தின் கதை முழுக்க முழுக்க தண்ணீரில் வாழும் நேமி கிரகவாசிகளை வைத்து சென்று கொண்டிருந்தது.

ஆனால் இந்த பாகத்தில் ஃபயர் அண்ட் ஆஷ் என்று வைத்திருப்பதால் நெருப்பில் வாழும் ஒரு புது சமூகத்தை இந்த திரைப்படத்தில் அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் பெயரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் இந்த படத்தின் கதை போகப் போக இப்பொழுது கதாநாயகனாக இருக்கும் கதாபாத்திரமே தொடர்ந்து கதாநாயகனாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website