“ஆண்களுடன் மட்டும்தான் உறவு வைத்துக் கொண்டிருக்கிறேன்” – ஓவியா சர்ச்சை பேச்சு!

September 29, 2023 at 8:50 pm
pc

பிரபல நடிகை ஓவியா குறித்து பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகை ஓவியா சமீபத்திய பேட்டி ஒன்றில் பல்வேறு கோக்குமாக்கான கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

அவர் பேசியதாவது, நான் ஓரினச்சேர்க்கையாளர் என்று தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், அது உண்மை கிடையாது. இப்போது வரை நான் ஆண்களுடன் மட்டும் தான் உறவு வைத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய உடலுறவு முறை இயற்கைக்கு நேராக தான் இருக்கிறது. தவிர எதிராக இல்லை. துரதிஷ்டவசமாக நான் ஓரினச்சேர்க்கையாளராக ஆகவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதில் கொடுமை என்னவென்றால் ஒரு மதுபான விடுதி ஒன்றில் அமர்ந்து கொண்டு அங்கே மது குடித்தபடியே இந்த பேட்டியை கொடுத்திருக்கிறார் நடிகை ஓவியா என்பதுதான்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நடிகையாக இருந்து கொண்டு மதுபான விடுதியில் அமர்ந்தபடி மது குடித்துக்கொண்டு விவகாரமான இந்த விஷயத்தை எல்லாம் பதிவு செய்ய வேண்டுமா? என்று விளாசல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website