ஆண்களே உஷார்!ஆண்களுக்கு வர கூடிய புற்றுநோய்க்கான அறிகுறிகள்

March 6, 2023 at 6:23 am
pc

புற்றுநோய் எனப்படுவது செல்கள் கட்டுப்பாடில்லாமல் பிரிந்து சுற்றியுள்ள திசுக்களில் பரவும் ஏற்படும் ஒரு நோயாகும்.

பெரும்பாலான புற்றுநோயை உண்டாக்கும் டி .ன்.ஏவில் ஏற்படும் மாற்றங்களால் புற்றுநோய் உண்டாகிறது.பெரும்பாலான புற்றுநோயை உண்டாகும் டி.ன்.ஏ மாற்றங்கள் மரபணுக்கள் எனப்படும் டி.ன்.ஏ பிரிவுகளில் இடம்பெறுகின்றன.   

உலக சுகாதார கூட்டுத்தாபனத்தின்(WHO)கருத்துப்படி 33 சதவீதமான புற்றுநோய் மதுபானம் மற்றும் புகையிலை உடல் சுட்டெண் (BMI)விகிதம் அதிகரித்தல்,குறைவான அளவில் மரக்கறிகள்,பழங்கள் உணவோடு சேர்த்தல் போன்றவை காரணங்களாகும். 

  • உங்கள் விறைகள் வழமைக்கு மாறாக நிறையில் இல்லாமல் வித்யாசமாகவோ அல்லது ஒன்றோடு ஒன்று வேறுபட்டோ காணப்படுவது இதற்கான அறிகுறிகள் ஆகும்.

  • உங்கள் கழிப்பறை பழக்கத்தில் திடீர் மாற்றம்.

  • சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது இரத்த கசிவு .

  • மலச்சிக்கல் மற்றும் மலம் களின் பொது இரத்தக்கசிவு.

  • அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம்.

  • இருமல் கரகரப்பு அல்லது வாயில் மாற்றங்கள்.

  • விவரிக்க முடியாத எடை இழப்பு.

  • தலையில் இல்லாமல் உடலில் மற்ற பாகங்களில் தோல் வளர்ச்சிகள் அனால் இது புற்றுநோய் அறிகுறிகள் ஆகும்.

  • தலை கழுத்து மற்றும் உடலில் மற்ற பாகங்களில் தோலில் மச்சங்கள் வடிவம் நிறத்தில் மாற்றம் ஏற்படுமாயின் அது தோல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறி.

  • நிணநீர் கணுக்கள் மென்மையாக காணப்ப
  • டுதல் அல்லது நிணநீர் கணுக்களில் வீக்கம்.

  • சிறுநீர் கழிப்பதில் சிரமம்,சிறு நீர் கழிக்க இயலாமை,தாமதமாக சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும்.

  • மார்பகங்களில் வித்தியாசமான கட்டிகளை கவனித்தால் மருத்துவர் ஒருவரை நாடி ஆலோசனை பெறுதல் சிறந்தது.

தடுப்பதற்கான வழிமுறைகள் 

  • புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறை என்னவெனில் ஆரம்ப கட்டத்திலேயே அறிந்துகொள்வது தான்.

  • புற்றுநோய்க்கான அறிகுறிகளை தெரிந்து வைத்துக்கொண்டால் அவற்றை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆகையால் பெண்களும் சரி,ஆண்களும் சரி இது தொடர்பான விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.    

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website