ஆண்களே தெரிஞ்சிக்கோங்க… வெயில் காலத்தில் ஜில் பீர் ஆபத்து!

April 28, 2023 at 10:58 am
pc

நமது உடலில் உள்ள நீர்த்தன்மைதான் நமது உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே. 

ஆனால் கோடைக்காலத்தில் நாம் அறியாமலேயே வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம். பொதுவாக உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உட்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. 

இந்த நீரிழப்பு தன்மை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால், அவரது வாய் மற்றும் நாக்கு வறட்சியாக மாறும். கடுமையான சோர்வு, பசியின்மை, தலைவலி ஏற்பட்டு விடும். 

இது தவிர காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வீக்கம், காய்ச்சல் ஏற்படுகிறது. 

தொடர்ந்து சூடான அனல் காற்றை சுவாசிக்கும்போது, சுவாசப்பாதைகள் சுருங்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

நமது உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் இருக்கிறது. 

தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது. இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்துபோகும் நிலைக்குத்தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று கூறுகின்றனர். இதில் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக், மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் என்று இரண்டு வகை. 

எந்த செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவதுதான் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக். 

இது உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால் இளவயது காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.

இதற்கு அவர்கள் வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்..

கோடை வெயில் கொளுத்ததொடங்கினாலும், மதுக்கடைகளில் விற்பனைவெளுத்து வாங்குகிறது. குறிப்பாக மது பானங்கள் தவிர மதுப்பிரியர்களின் கிக் கேற்றும் குளிர்பானமாக திகழும் பீர் விற்பனை பொங்கி வழிகிறது. 

இதனால் அதற்கு சில வேளைகளில்தட்டுப்பாடும் உள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் வெயில் காலங்களில் பீர், மற்றும் மது பானங்களை அருந்துகிறவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் அபாயங்கள் உள்ளதாக கூறுகின்றனர். 

வெயில் காலங்களில் மது அருந்தும்போது உடலில் உள்ள ரத்த குழாய்களின் அளவு அதிகரித்து நீர் சத்துக்கள் அதிகளவில் வெளியேறும். இந்த நிலையில் போதையால் தாகம் தடைபடும்போதும், தவிர்க்கப்படும் போதும், தண்ணீர் அருந்தக்கூடிய உணர்வு ஏற்படுவதில்லை. 

இந்த நிலையில் போதையில் தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போது உடம்பில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறும். இதனால் ரத்த நாளங்களில் அதிக பாதிப்புஏற்படும். இதனால் அடைப்புஏற்பட்டு இதயத்தில் பிரச்சினை ஏற்படும் என்கின்றனர். 

ஆகவே ஜில்பீர் மட்டுமின்றி, எந்த வகையான பீர் மற்றும் மது பானங்களை வெயில் காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆபத்தானது என்பது மருத்துவர்களின் ஆலோசனை

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website