ஆண்களே! ஷேவிங் செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…

October 16, 2021 at 8:24 am
pc

இன்றைய காலத்தில் தாடி வைத்துக் கொள்வது ஃபேஷனாகிவிட்டது. இதற்கு சோம்பேறித்தனத்தைக் காரணமாகக் கூறலாம். சில ஆண்களுக்கு சரியாக ஷேவிங் செய்யத் தெரியாது.

ஷேவிங் செய்யும் போது பல தவறுகளை செய்வார்கள். இதனாலேயே காயங்கள், எரிச்சல், அரிப்பு, வறட்சி போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது.

எப்போதும் ஷேவிங் செய்யும் போது பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுடன் இல்லாவிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும்.

இங்கு ஷேவிங் செய்யும் ஆண்கள் செய்யும் தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தவறுகளால் தான் அவர்கள் ஷேவிங் செய்த பின் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

பல நாட்களாக ஒரே ரேசரைப் பயன்படுத்துவது

பல நாட்களாக ஒரே ரேசரைப் பயன்படுத்தினால், சரியாக ஷேவிங் செய்யாதது போல் இருப்பதோடு, சில நேரங்களில் காயங்களையும் சந்திக்க நேரிடும். மேலும் பழைய ரேசரில் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். இதை மீண்டும் பயன்படுத்தும் போது, காயம் ஏற்பட்ட இடத்தில் அந்த பாக்டீரியாக்கள் நுழைந்து மோசமாக்கும். எனவே அடிக்கடி ரேசரை மாற்ற வேண்டியது அவசியம்.

ரேசரை பகிர்ந்து கொள்வது

ஆண்களிடம் உள்ள ஓர் கெட்ட பழக்கம் என்றால் அது தங்களுடைய பொருட்களை நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது தான். இப்படி ரேசரைப் பயன்படுத்தினால், அவர்களின் சருமத்தில் உள்ள கிருமிகள் ரேசரின் வழியே உங்கள் சருமத்திற்கும் நுழைந்து பிரச்சனைகளை ஏற்படுத்தி, முக அழகைக் கெடுக்கும்.

ஷேவ் செய்யும் பகுதியை நீரில் ஊற வைக்காமல்

இருப்பது ஷேவிங் செய்த பின் அப்பகுதி மென்மையாக இருக்க வேண்டுமானால், முதலில் சிறிது நேரம் அப்பகுதியை நீரால் நனைத்து ஊற வைக்க வேண்டும். நேரமில்லாமையால் இந்த காரியத்தை பெரும்பாலான ஆண்கள் செய்வதில்லை. வேண்டுமானால் நீங்கள் குளித்து முடித்த பின், இறுதியில் ஷேவிங் செய்யலாம். இதனால் ஷேவிங் செய்வதும் சுலபமாகும்.

இறந்த செல்களை நீக்குவதில்லை

ஷேவிங் செய்த பின், அவ்விடம் மென்மையாக இருக்க, ஷேவிங் செய்யும் முன் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டும். அதற்கு அப்பகுதியை கடலை மாவால் சிறிது நேரம் தேய்த்து கழுவி, பின் 5 நிமிடம் கழித்து ஷேவிங் செய்தால், இறந்த செல்கள் ரேசரில் அடைப்பை ஏற்படுத்துவதைத் தடுத்து, காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கலாம்.

சோப்பைப் கொண்டு ஷேவ் செய்வது

சில ஆண்கள் வீட்டில் ஷேவிங் க்ரீம் இல்லை என்று அவசரத்திற்கு சோப்பைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி சோப்பைக் கொண்டு ஷேவிங் செய்தால், அப்பகுதியில் வறட்சி இன்னும் அதிகரித்து, கடுமையான அரிப்பை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே அவசரத்திற்கு சோப்பைப் பயன்படுத்தாமல், கண்டிஷனரை வேண்டுமானால் பயன்படுத்துங்கள்.

நீரில் அலசுவதில்லை

நேரமாகிவிட்டது என்று சில ஆண்கள் ஷேவிங் செய்யும் போது ஒவ்வொரு முறையும் நீரில் அலசாமல் அப்படியே ஷேவ் செய்வார்கள். இப்படி செய்தால் ரேசரில் முடி, க்ரீம், இறந்த செல்கள் போன்றவை அதிகம் சேர்ந்து காயங்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே ஒவ்வொரு முறையும் தவறாமல் நீரில் ரேசரை அலசி ஷேவிங் செய்யுங்கள்.

அதிக அழுத்தம்

கொடுப்பது தாடி முழுமையாக நீங்க வேண்டுமென்று சில ஆண்கள் அதிக அழுத்தத்தைக் கொடுத்து ஷேவிங் செய்வார்கள். இப்படி செய்வதால் ஷேவிங் செய்த பின் எரிச்சலும், அரிப்பும், சில நேரங்களில் காயங்களும் தான் ஏற்படும். நீங்கள் அழுத்தம் கொடுத்தால் தான் தாடி முழுவதும் நீங்கும் என்பதில்லை. மென்மையாக செய்தாலே ரேசரில் உள்ள பிளேடால் முடி முழுமையாக நீக்கப்படும்.

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதில்லை

ஷேவிங் செய்த பின் அப்பகுதியில் வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டியது அவசியம். இச்செயலைத் தவறாமல் செய்தாலே ஷேவிங் செய்த பின் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website