ஆதார் அட்டை தொடர்பில் வெளியான பயனுள்ள அறிவிப்பு!

October 11, 2022 at 8:21 am
pc

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆதார் கார்டை அனைவருமே கையில் வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சில சமயங்களில் ஆதார் கார்டை வீட்டில் மறந்து வைத்துவிட்டு சென்று விடுவோம். ஒரு சில சமயங்களில் அதனை தொலைக்கவும் நேரிடும். அப்போது ஆதார் தேவைப்பட்டால் அதற்காக இ ஆதார் என்ற வசதி உள்ளது. இ-ஆதார் என்பது டிஜிட்டல் ஆதார் கார்டு ஆகும். இதனை நாம் ஸ்மார்ட் ஃபோன்களில் வைத்துக் கொள்ள முடியும். இதனை டவுன்லோட் செய்வது மிகவும் சுலபம்தான்.

அதற்கு முதலில் uidai.gov.in என்ற முகவரியில் சென்று ‘Get Aadhaar’ என்ற சேவையில் ‘download Aadhaar’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் நீங்கள் UID, EID அல்லது VID ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ‘Send OTP’ என்பதை கிளிக் செய்தால் உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.

அதை பதிவிட்டு ‘verify and download’ என்பதை கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும். உடனடியாக உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டு PDF வடிவத்தில் உங்களது கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிடும்.

இந்த PDF காப்பியை ஓப்பன் செய்வதற்கு நான்கு இலக்கு பாஸ்வேர்டு கேட்கப்படும். அதில் உங்களது பெயரின் முதல் நான்கு எழுத்துகளை கேப்பிட்டல் லெட்டரிலும், அதைத் தொடர்ந்து உங்களது பிறந்த தேதிக்கான வருடத்தையும் பதிவிட வேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website