ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான்., மைதானத்தில் ரசிகர்களிடையே மோதல்..

September 8, 2022 at 11:28 am
pc

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஆஃப்கானிஸ்தான் -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஃப்கானிஸ்தான் அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. 130 என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.  
பாகிஸ்தான் அணி மோசமாக பேட்டிங் செய்தது. ஷதாப் கான் மட்டும் ஒரளவு தாக்குப்பிடித்து ஆடி 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு பிறகு மைதானத்திற்கு வந்திருந்த ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே சண்டை நடந்தது.  

இது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொயிப் அக்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ரசிகர்கள் தாக்கி கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website