ஆயுளைக் குறைக்கும் கெட்டப் பழக்கங்கள்!

August 3, 2023 at 9:31 pm
pc

நாம் அன்றாடம் நமக்கு தெரியாமலேயே பல கெட்டப் பழக்கங்களை பழகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை ஒவ்வொன்றும் நமது ஆரோக்கியம் பாதிப்படையும். அப்படியான கெட்டப்பழக்கங்கள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொண்டு தினமும் ஆரோக்கியத்தை பாதுகாத்து வந்தால் எதிர்காலத்தை சிறப்பானதாக கொண்டு செல்லாம். அந்தவகையில் இப்படியான ஆயுளைக் குறைக்கும் கெட்டப்பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.

தூக்க பழக்கம்

பொதுவாகவே தூக்கம் என்பது அனைவருக்கும் மிக முக்கியமானது. அதிலும் பெரியவர்கள் தினமும் 6 இலிருந்து 8 மணி நேர வரைக்கும் தூங்குவது அவசியம். ஆனால் இந்த தூக்கம் போதுமான அளவு இல்லையெனில் அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்கள் உடலுக்கு போதுமான தூக்கம் இல்லை எனில் மனநிலை, எரிச்சல், ஞாபகதிறன் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும், உடல் பருமன், இதய நோய் நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். அதனால் தினமும் குறித்த நேரத்திற்கு தூக்குவது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

புகையிலை பாவனை

எமது உடலுக்கு நாமே விலைக் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்வதுதான் இந்த புகையிலை பழக்கம். இவை உங்கள் ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கக் கூடியது. புகைப்பிடித்தல், வெற்றிலைப் பாக்கு போடுதல், மூக்குப்பொடி போன்றவற்றை உங்கள் வாழ்க்கைக்கு கொண்டு வராதீர்கள். அப்படி இவை உங்கள் வாழ்க்கையில் நாளாந்தம் இருந்தால் அவை எதிர்காலத்தை பாதிக்கும் அதனால் இதிலிருந்து விடுபட தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

உணவு பழக்கம்

எமது ஆரோக்கியத்திற்கு உணவு இன்றியமையாதது ஒன்று தான். பொதுவாக தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள், நேரத்தை தவற விட்டு வேறு நேரங்களில் சாப்பிடுவது, இரவு வேளைகளில் ஸ்நேக்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்களால் உங்கள் ஆரோக்கியம் பாதிப்படையும். இதனால் உடற்பருமன் அதிகரிக்கும், நீரிழிவு நோய் ஏற்படும், இதய நோய் ஏற்படுதல் போன்ற பிரச்சினைககளை சந்திக்க நேரிடும். 

சோம்பேறித்தனம்

உங்கள் வாழ்க்கை இலட்சியத்தை தடுப்பது இந்த சோம்பேறித்தனம் தான். இவை உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றக் கூடியது. இந்த சோம்பேறித் தனத்தால் உங்கள் நேரத்தை வீணடித்து வேறு எதிலாவது செலவழிக்கும் போது உங்கள் எதிர்காலமும் ஆரோக்கியமும் பாதிப்படைகிறது. அதனால் ஒவ்வொரு நாளும் 5 முதல் 10 நிமிடம் வரை பிரேக் எடுத்து சிறிது தூரம் நடக்க வேண்டும். அல்லது கை, கால்களை அசைத்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், உங்கள் பொழுதில் கொஞ்ச நேரமாவது இயற்கையுடன் செலவழிக்க வேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website