ஆரோக்கியமான காராமணி இனிப்பு சுண்டல் நீங்களும் சமைக்கலாம் வாங்க ….

May 19, 2022 at 12:16 pm
pc
தேவையான பொருட்கள் :

சிவப்புக் காராமணி—– 1கப்
வெல்லம் (பொடித்தது)—– 200 கிராம்
ஏலக்காய்த்தூள் —– சிறிதளவு
தேங்காய்த் துருவல் —– ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

சிவப்புக் காராமணியை வெறும் வாணலியில் வறுத்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வைத்து தேவையான தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கி, நீரை வடிக்கவும்.வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கெட்டியாகப் பாகு காய்ச்சவும். வேகவைத்த காராமணியை பாகுடன் சேர்த்து தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

வெல்லத்துக்குப் பதில் உப்பு சேர்த்தும் இந்தச் சுண்டலைத் தயாரிக்கலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website