ஆரோக்கியமான கேழ்வரகு இடியாப்பம் செய்வது எப்படி …!!
தேவையானபொருட்கள் :
கேழ்வரகு மாவு – 1 கப்
அரிசி மாவு – ¼கப்
உப்பு – தேவையான அளவு
நீர் – 2 கப்,
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை :
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கேழ்வரகு மாவை போட்டு 4 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்.
பின்பு அதனுடன் அரிசி மாவு சேர்த்து வறுக்கவும். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அந்த நீரை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு பிசைந்து அதனை மூடி 15 நிமிங்கள் வைக்கவும்
15 நிமிடம் கழித்து மாவை திறந்து அதனுடன் சிறிது எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்கு பிசையவும்.
பின்பு மாவை இடியாப்பம் அச்சினுள் வைக்கவும்
இட்லி தட்டுகளை எடுத்து அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். இட்லி தட்டில் மாவை இடியாப்பமாக பிழியவும்.
இட்லி தட்டை குக்கரில் வைத்து மூடி வைத்து 7 நிமிடம் வேக வைக்கவும்
இடியப்பம் வெந்ததும் அதனை இறக்கி ஆற வைத்து ஆறியதும எடுத்து வேறெரு பாத்திரத்தில் வைக்கவும்
சத்தான கேழ்வரகு இடியாப்பம் ரெடி.