இணையதளத்தை கலக்கும் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் கூலான நடனம்!

April 24, 2023 at 6:28 pm
pc

இணையதளத்தில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

சாதனை படைத்த விராட் கோலி

தற்போது, 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 12 நகரங்களில் நடந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடர்களில் 6000 ஓட்டங்கள் கடந்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

அதாவது, விராட் கோலி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 6844 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இவருக்கு அடுத்தப்படியாக 2வது இடத்தில் 6477 ஓட்டங்கள் எடுத்து ஷிகர் தவானும், 3-வது இடத்தில் 6109 ஓட்டங்களை எடுத்து டேவிட் வார்னரும், 4-வது இடத்தில் 6014 ஓட்டங்கள் எடுத்து ரோஹித் சர்மாவும் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

விராட் – அனுஷ்கா சர்மாவின் கூலான நடனம்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவில், 

விராட் கோலியும், மனைவி அனுஷ்கா சர்மாவும் கூலாக நடனம் ஆடியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து லைக்குகளை அள்ளித் தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.    

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website