இந்தியன் 2 விழாவுக்கு வராத சித்தார்த்!

ஷங்கர் இயக்கி இருக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1ம் தேதி நடைபெற்றது. அதில் கமல், சிம்பு உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆனால் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருக்கும் சித்தார்த் வரவில்லை. அவர் ஏன் வரவில்லை என பல்வேறு விதமாக பேச்சு எழுந்த நிலையில், ‘நான் ஏற்கனவே முடிவெடுத்து வைத்திருந்த ஒரு விஷயத்தால் தான் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது’ என சித்தார்த் கூறி இருக்கிறார்.
சித்தார்த் வராததற்கு காரணம் அவர் காதலி அதிதி ராவ் உடன் வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்று இருப்பது தான். இத்தாலி நாட்டின் Tuscany என்ற இடத்தில் சித்தார்த் காதலி உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.