இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒரு நாள் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட வீரர்!

December 15, 2019 at 5:52 pm
pc

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பகல் – இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த தொடரில் பெரிதாக ரன் குவிக்காவிட்டாலும், ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார்.

ஆல் ரவுண்டர் சிவம் தனது பேட்டிங் திறமையை, டி20 தொடரில் ஒரு போட்டியில் 27 பந்துகளில் 54 ரன்கள் குவித்து நிரூபித்தார். எனினும், அவருக்கு டி20 அணியில் மட்டுமே இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருநாள் அணியில் அவரை அறிமுகம் செய்துள்ளார் கேப்டன் விராட் கோலி. இந்த போட்டியில் களமிறங்கிய சிவம் 6 பால்களுக்கு 9 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website