இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ஜடேஜாவின் மனைவிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

November 14, 2022 at 7:13 pm
pc

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவின் மனைவிக்கு எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு அமைந்துள்ளது.

அதன்படி குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட ஜடேஜா மனைவி ரிவாபாவுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ரிவாபா குஜராத்தின் ஜாம்நகர் வடக்கில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த வாய்ப்பை பல பேர் எதிர்பார்த்து காத்திருக்க அதிர்ஷ்டம் ரிவாபாவுக்கு அடித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலிலேயே ரிவாபாவின் பெயரும் இடம்பெற்றது உள்ளூர் பாஜகவினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிவாபாவும் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுகிறார். அவர் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் கவனம் செலுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரிவாபா பாஜகவில் இணைந்தார், இதனிடையில் அவர் தற்போதைய எம்.எல்.ஏ.வின் கோபத்தையும், உள்ளூர் நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இன்மையையும் எதிர்கொளள நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website