இனி உங்க கிரைண்டர் நைசா மாவு அரைக்க வேண்டுமா …? உங்களுக்கான அட்டகாசமான டிப்ஸ் …!!

October 24, 2022 at 3:43 pm
pc
  • கிரைண்டரை அதிகமாக மாவு அரைப்பதற்கு நாம் பயன்படுத்துவோம். தானியங்களை அதிகம் சேர்க்காமல் சிறிதளவு சேர்த்து அரைப்பதால் கூட கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.
  • கிரைண்டர் வாங்கும் போது அரைக்கும் கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக இருப்பதை பார்த்து வாங்க வேண்டும். கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் கல்லின் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல வரும்.
  • குழவியில் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும். கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். அவை லூசாக இருந்தால் மாவு சரியாக அரைக்காமல் இருக்கும்.
  • கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி தொந்தரவு இருக்கும் போது சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயம் உள்ளது. எனவே கிரைண்டரை தனியாக வைக்க வேண்டும்.
  • கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.
  • மேலும், கொர கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்க வாய்ப்புள்ளது. எனவே உடனே பேரிங்கை மாற்ற வேண்டும். மோட்டார் சுழன்று டிரம் சுழற்சி இல்லை என்றால் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.
  • கிரைண்டரில் உள்ள பாலிஷ் மங்காமல் இருக்க, வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் தடவி துணியால் துடைத்து வந்தால் கிரைண்டர் புதிதாக இருக்கும்.
  • கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website