இனி எந்த டயட்டும் தேவையில்ல…! இத மட்டும் ஃபாலோப் பண்ணுங்க. ஃபிட்டா இருப்பீங்க..

May 28, 2022 at 1:26 pm
pc

இப்போது இருக்கும் கால கட்டத்தில், வித விதமான உணவுகள் பெரும்பாலான மக்களை ஈர்த்து வருகிறது. குறிப்பாக ஃபாஸ்ட் புட் என்ற பெயரில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் மக்களால் பெருமளவு ஈர்க்கப்படுகிறது. இதனால், பல்வேறு விதமான உடல் உபாதைகள் வருகின்றன.

உடல் எடை அதிகரிக்கக் காரணம்

இருந்த போதிலும், நாம் கட்டுப்பாடுடன் இல்லாமல், ருசிக்காக கேடு தரும் உணவுப் பொருள்களையும் வாங்கி உண்கிறோம். இதில் முக்கியமானது என்னவென்றால், இது போல உணவுகளைச் சாப்பிடுவதால் உடல் எடையும் அதிகரிக்கக் கூடும். மேலும், நாம் செய்யும் வேலையைப் பொறுத்தும் உடல் பருமன் அதிகரிக்கும். அதாவது, நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் சீரணமடையாமல், நம் வயிற்றிலேயே கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிப்பது போலத் தோன்றும்.

குறைப்பதற்கான வழிகள்

இவ்வாறு உடல் எடை அதிகரிப்பதால், இன்னும் சில பேர் ஜிம்-க்கு சென்று உடல் எடையைக் குறைக்கச் செய்வர். மேலும், இன்னும் சில பேர் உடல் எடையைக் குறைப்பதற்கு டயட் செய்வர். டயட் இருப்பினும், ஒரு சில பேருக்குத் தான் உடல் எடை குறையும்.

டயட் தேவையில்லை

உடல் பருமனைக் குறைப்பதற்கு டயட் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நமது அன்றாட உணவுப் பழக்கத்தை நாம் மாற்றினாலே நம்மால் உடல் எடையைக் குறைக்க முடியும். நாம் இப்போது உண்ணக் கூடிய உணவுப் பொருள்கள் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதாவது நமது இடங்களிலேயே கிடைக்கக் கூடிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உட்கொள்ளும் உணவு முறை இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

பெரும்பாலும், நாம் தினமும் உணவுப் பொருள்களில் எடுக்கும் கலோரியின் அளவை நம் எடைக்குத் தகுந்தாற்போலக் குறைத்தாலே நம் பருமனைக் குறைக்க முடியும். ஆனால், ஒரு சில பேருக்கு பசி அடங்காத உணர்வு அல்லது சோர்வு போன்றவற்றால் மீண்டும் அதிகமான உணவை எடுத்துக் கொள்வர்.

கார்போஹைட்ரேட் அதிகமாகவா? குறைவாகவா?

பொதுவாக, நம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளக்கூடிய மாவுச்சத்தான கார்போஹைட்ரேட்டைக் குறைத்துக் கொண்டாலே போது. நம் உடலில் பெரும்பாலும் எடை குறைந்து விடும் என்று கூறுவர். அதற்கென்று சுத்தமாக இல்லாமலும் இருக்கக் கூடாது. அரிசி, கோதுமை, பழங்கள் என எல்லாவற்றிலும், திட்டமிட்ட படி உணவை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நாம் நினைத்த படி, உடல் பருமன் குறையத் தொடங்கும்.

தவிர்க்க வேண்டியவை

பசிக்கு சாப்பிடுவதை விட ருசிக்கு சாப்பிடும் காலம் இது. இத்தகைய கால கட்டத்தில் நாம் நமது உடலுக்கு கேடு தருமா? தராதா? போன்ற எந்த விஷயங்களைப் பற்றியும் எண்ண மாட்டோம். அரிசி, கோதுமை, மைதா, ஃபாஸ்ட் புட் உணவு, டீ, காபி, சிப்ஸ், ஐஸ்கிரீம் மற்றும் இன்னும் சில குளிர்பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், போன்ற அனைத்துமே உடல் எடையை அதிகரிக்கக் கூடியதாக அமைந்தது. இது போன்ற உணவுப் பொருள்களைக் கட்டுப்பாடுடன் எடுப்பதுடன், உடலுக்குக் கேடு தரும் பொருள்களை எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே உடல் எடை குறைவதுடன், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website