இனி நீங்களும் ஹீரோயின் மாதிரி ஃபிட்டாக டிரெஸ் பண்ணலாம் … உங்களுக்கான ட்ரெஸிங் சீக்ரெட் …..!!

June 6, 2022 at 7:09 am
pc

பொதுவாக, நாம் உடுத்தும் உடையின் தான் நம்முடிடைய அழகு இருக்கிறது. பெண்களை பொறுத்தவரையிலும், ஆடை விஷயத்தில் தெளிவாக இருந்தால் சாதாரண உடையாக இருந்தாலும் தேவையாய் காட்சியளிப்பீர்கள். இதற்காக, காஸ்ட்லியாக உடை வாங்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. நீங்க வைத்திருக்கும் ஆடைகளை வைத்தே உங்களுடைய டிரெஸிங் சென்ஸை இந்த காலத்திற்கு ஏற்றார் போல மேம்படுத்திக் கொள்ளலாம். எப்படி உடுத்தினால் அழகாகத் தெரியலாம் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள். கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக, நம்ப அழகாக டிரெஸ் செய்தால் எல்லோரும் நமக்கு பாசிட்டிவான கமெண்ட்ஸ் கொடுப்பாங்க. அதுமட்டுமல்லாமல், நீங்க மட்டும் தனித்துவமாக தெரிவீர்கள். சரி, நீங்க இதுவரை எப்படி உடை உடித்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால், இனிமேல் உங்களுக்களை தனித்துவமாக காட்ட, உங்களுடைய உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு ஆடைகளை அணிய வேண்டும். இது தான் மிகவும் முக்கியமான விஷயம். ஏனெனில், நாம் எவ்வளவு தான் அழகாக ஃபிட்டாக இருந்தாலும் அதன் அழகு நாம் உடுத்தும் உடையில் தான் இருக்கிறது. எனவே, எப்போது மற்றவர்களை கவரும் விதமாக உடை உடுத்துவதில் கவனமாக இருங்க. இப்போது, உங்களுக்கான டிப்ஸ்!

டிரெஸிங் சென்ஸ் பொறுத்த வரையிலும் கிலோத் ஃபிட்டிங் என்பது ரொம்பவே முக்கியம். ஃபிட்டிங் என்றால் ஒல்லியாக இருப்பவர்கள் மட்டும் தான் ஃபிட்டா டிரெஸ் போட வேண்டும் என்று ரூல்ஸ் கிடையாது. உங்களுடைய உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு டிரெஸ் போட்டாலே அது ஃபிட்டிங் தான். உதாரணமாக, நீங்க புதியதாக எந்த ஆடை வாங்கினாலும் அதை ஆல்ட்டர் செய்து உங்களுடைய உடலமைப்பிற்கு ஏற்றார் போல் அணிய வேண்டும்.

எப்பவும் பிரைட் கலர் ஆடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது ஆன்லைனிலும் சரி, ஆஃப்லைனிலும் சரி மிக்ஸ் & மேட்ச் ஆடைகள் ஏராளமாக இருக்கிறது. எனவே, அதை வாங்கி உடுத்த வேண்டும். எப்பவும் போடுற கலர்களையே போடாமல், புதிதாக கலர்களை தேர்ந்தெடுத்து உடுத்த வேண்டும். உதாரணமாக, நீங்க White Kurtha போடுறீர்கள் என்றால், அதற்கு வெள்ளை பேண்ட் அல்லது லெகிங் மற்றும் பிங்க், ரெட், டார்க் கிரீன் போன்ற டார்க் துப்பட்டாவை போட வேண்டும்.

நீங்க உடுத்தும் ஆடைகளில் எப்போது யுனிக் ஃபாலோ செய்ய வேண்டும். ஏராளமான யுனிக் டிசைன்ஸ் கொட்டிக்கிடைக்கின்றன. உங்களுக்கு எது பொருத்தமானதாக இருக்கிறதோ அதை தேர்ந்தெடுத்து எப்பவும் ஃபாலோ செய்ய வேண்டும். உதாராணமாக, நீங்க குர்த்தா உடுத்துகிறீர்கள் என்றால் காலர் நெக் & 3/4 சிலீவ் அணியலாம். அதுவே, புடவையாக இருந்தால், நீங்க உங்க பிளவுஸ் அணிவதில் யுனிக்காக இருக்க வேண்டும்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website