இனி முட்டையை இப்படி சாப்பிடாதீர்கள்!

June 28, 2023 at 9:13 pm
pc

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று தான் முட்டை. இதனை அவியல், பொரியல், அம்லட் என வித்தியாசமான முறைகளில் செய்து சாப்பிடலாம். இதனை தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான கால்சியம், புரோட்டின் சத்துக்கள் கிடைக்கின்றன.

அந்த வகையில் முட்டையை இரண்டாவது தடவை சூடுப்படுத்தி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

நாம் உணவுகளில் முட்டையை சேர்த்து கொள்வதால் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.

இதனால் திசுக்கள் வளர்ச்சியடைந்து அது வலிமை பெறவும் உதவியாக இருக்கின்றன. இத்தனை ஊட்டச்சத்துக்கள் பொருந்திய உணவை ஒரு தடவைக்கு இரண்டு முறை சூடாக்கினால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழிவடைந்து விடும்.

குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு மீண்டும் எடுத்து பயன்படுத்தலாம். ஆனால் அதனை சூடேற்றக்கூடாது.

மேலும் முட்டையை தினமும் நாம் சாப்பிடும் உணவில் சேர்த்து கொண்டால் கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை ஆகிய நோய்கள் வராமல் தடுகின்றது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website