இப்போ எனக்கு இந்த பசிதான் அதிகமா இருக்கு -சிம்புவின் வைரல் வீடியோ

March 8, 2023 at 12:54 pm
pc

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.

ஒரு திரையுலக பிரபலத்தின் மகனாக தமிழில் அறிமுகமாகினாலும் தனது சுயமுயற்சி மற்றும் திறமைகளை கொண்டு தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பெற்று பிரபலமாகியுள்ளார் சிலம்பரசன்.
இவர் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும், இயக்குனர் என தமிழ் திரையில் பிரபலமாக பணியாற்றி வந்துள்ள இவர், இசையமைப்பாளராக 2017ம் ஆண்டு சந்தானம் நடித்த “சக்க போடு போடு ராஜா”  திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராவும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.பிரபலமாகியுள்ளார்.
பல திரைப்பட பாடல்களுக்கு பாடலாசிரியாக பல பாடல்களை எழுதியுள்ளார். பின்னர் “லவ் ஆன்தம்” என்ற ஒரு ஆங்கில பாடலை பாடி உலகளவில் பிரபலமானார் சிம்பு.
நடிகனாக பல படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், பாடலாசிரியராக 2006ம் ஆண்டு “லூசு பெண்ணே” பாடலை எழுதி பாடியுள்ளார் சிம்பு. பின்னர் “காள காள”, “எவண்டி உன்ன பெத்த”, “வேர் இஸ் தி பார்ட்டி”, “பொண்டாட்டி”, “லவ் பண்ணலாமா வேணாமா” என பல பிரபலமான பாடல்களை எழுதி தமிழ் திரையுலகில் புகழ் பெற்றார் சிம்பு

  • 2006ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கெருவப்படுத்தியுள்ளது.
  • சர்வதேச தமிழ் நாடு திரைப்பட விருதுகளான சீமா விருது இவருக்கு 2012ம் ஆண்டின் “ஸ்டைலிஷ் ஸ்டார் ஆப் சவுத் சினிமா” என்ற விருது வழங்கியுள்ளது.
  • ஐடிஃப்எ குழு சார்பில் சிறந்த நடிகருக்கான விருதினை வானம் படத்திற்காக 2011ம் ஆண்டு பெற்றுள்ளார்.
  • விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை எடிசன் விருது அமைப்பு குழு இவருக்கு 2010ம் ஆண்டு வழங்கியுள்ளது.
  • 2009ம் ஆண்டு சிலம்பாட்டம் படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான விருதும், சிறந்த நடனக் கலைஞருக்கான விருதையும் இசையருவி தமிழ் மியூசிக் விருதுகள் இவருக்கு வழங்கியுள்ளது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website