இயக்குநரை திருமணம் செய்யப் போகும் ரச்சிதா… பயில்வான் பரபரப்பு தகவல்!

October 26, 2022 at 7:05 pm
pc

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி டிவி இயக்குநர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

பெங்களூரை பூர்விகமாக கொண்டவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சில கன்னட படங்களில் நடித்துள்ள ரச்சிதா, பின்னர் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த ரச்சிதா, தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரிய ல் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார் ரச்சிதா.

7 ஆண்டுகளுக்கு முன்பு
7-
ரச்சிதா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் ரச்சிதா குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தாலி இல்லாமல்

அதில் அவர் பேசியிருப்பதாவது, சிரித்துக்கொண்டே டயலாக்குகளை பேசுவதால் ரச்சிதாவை ரசிகர்கள் சின்னத்திரை சரோஜா தேவி என அழைக்கின்றனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரச்சிதா தாலி இல்லாமல் வெறும் கழுத்துடன் உள்ளார். தன்னை சிங்கிள் என்றும் கூறி கொள்கிறார்.

குழந்தை வேண்டும் என்று…

ரச்சிதா 7 ஆண்டுகளுக்கு முன்பு தினேஷ் என்பவரை திருமணம் செய்தார். சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். சமீபத்தில்தான் ரச்சிதா தனது கணவரை பிரிந்து வாழ்வதை ஒப்புக்கொண்டார். அம்மாவுக்கு பணம் கொடுக்க தினேஷ் அனுமதிக்கவில்லை. மேலும் குழந்தை பெற்றுக்கொள்ள தினேஷும் அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தினார்கள்.

எப்படி நடிப்பது?

குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவர்களிடம் ஆலோசித்த போது 6 மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றார்கள். அப்படி 6 மாதம் ஓய்வில் இருந்தால் ஒப்பந்தமான சீரியல்களில் எப்படி நடிப்பது? செலவுக்கு பணம் வேண்டும் என்பதால் சீரியல்களில் நடித்து வருகிறேன். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகாராறு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்கிறோம் என்றார்.

நூல் விடும் ராபர்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரச்சிதா மகாலட்சுமிக்கு ராபர்ட் மாஸ்டர் நூல் விட்டு வருகிறார். வெளியில் போய் நாம் நண்பர்களாக இருப்போம் என்றும் கூறியுள்ளார். ஆனால் ரச்சிதா சிறு புன்னகையுடன் நழுவிவிட்டார். ஏற்கனவே ராபர்ட் வனிதாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ராபர்ட் நல்லவர் அல்ல பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என நடிகை வனிதா கூறியிருந்தார்.

டிவி இயக்குநருடன் திருமணம்?

அசல் கோளாறும் ரச்சிதாவுக்கு தூது விட்டார். ஆனால் அவர் முகத்தை சுளித்துவிட்டு சென்றார். ரச்சிதா மகாலட்சுமி டிவி இயக்குநர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website