இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடி ஆண்ட்ரியா வா ??

March 25, 2020 at 11:05 pm
pc
தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் ‘உதயம் என்.எச் 4′, ‘பொரியாளன்’, ‘காக்கா முட்டை’, ‘கொடி’, அண்ணனுக்கு ஜே’ போன்ற பிரபலமான திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் கடைசியாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் இணைந்து ‘மிக மிக அவசரம்’ திரைப்படத்தை தயாரித்தார்.இப்போது, வெற்றி மாறன் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், வெற்றிமாறன் தனது ‘கிராஸ் ரூட் புரொடக்ஷன்’ பேனரின் கீழ் புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார் என்றும், இப்படத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும், நடிகை விஜி சந்திரசேகர் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. பெண்களை மய்யமாக கொண்டு எடுக்கபடவுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு 2020 மே மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், அந்தத் திட்டங்கள் செயல்படுமா என்பதைப் பொருத்துருந்தே பார்க்க வேண்டும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website