இயக்குனர் வெற்றி மாறனுக்கு புகழாரம்-நடிகர் ரஜினிகாந்தை வெளுத்து வாங்கிய சாட்டை துரைமுருகன்…

February 6, 2023 at 3:03 pm
pc

இயக்குனர் வெற்றி மாறன் இப்படி பேசலாமா?பொறுப்புள்ள இயக்குனர், சமூக பற்றுள்ள இயக்குனர் ,அவரிடம் இப்படி எதிர்பார்க்கவில்லை .இந்த மாதிரியான வார்த்தைகளை எப்படி பேசினார் ,இதுதான் அவருடைய அறிவா ?என தி .மு.க. உடன்பிறப்புகள் கொதிக்க ஆரம்பித்து விட்டனர் .வெற்றி மாறன் அப்படி என்ன பேசினார் ?தமிழக பள்ளி கல்வி துறை நடத்திய கருத்தரங்கில் “தமிழ் கனவு ‘என்ற தலைப்பில் இயக்குனர் வெற்றி மாறன் பேசினார் .

நடிகர்களை தலைவர்னு கூப்பிடுவது கஷ்டமாக இருக்கிறது. சினிமாவில் தலைவர்களை தேடாதீர்கள். மேலும் இயக்குனர் வெற்றி மாறன் தனது பிள்ளைகளுக்கு “no cast” என சான்றிதழ் வாங்க போவதாக தெரிவித்தார் .சாட்டை துரைமுருகன் தலைவர் எப்படி பட்டவராக இருக்க வேண்டும் ,தான் செத்தாலும் பரவாயில்லை .தன்னை பின்பற்றும் மக்களுக்காக போராட வேண்டும் .நடிகர் ரஜினிகாந்த் பற்றி பேசுகையில் ,அவர் சிறந்த கலைஞர் .ஆனால் தமிழருக்கு தலைமை ஏற்க தகுதி இல்லை .அரசியலுக்கு வருவேன் என கூறி ரசிகர்களை ஏமாற்றியவர் .மேலும் தனக்காக பேனர் ,பாலபிஷேகம் ,மண்சோறு சாப்பிடும் ரசிகர்களுக்காக எதுவும் செய்யவில்லை .167 படங்கள் நடித்து ,1000 கணக்கான கொடிகளை தமிழ் இனத்திலிருந்து வாங்கிக்கொண்டு. ரசிகர்களுக்காகவும் ,ரசிகர் மன்றத்திற்காகவும் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாதவர் .இவர் தலைவரா ?என சாட்டை துரைமுருகன் வெளுத்து வாங்கியுள்ளார் .M.g. r ,M ,R ராதா,அண்ணா, கலைஞர் இவர்களை தலைவர் என்று அழைத்தனர் .ஏனென்றால் இவர்கள் சினிமாவில் அரசியலை கொண்டுவந்தனர் .புரட்சிகரமான கருத்துக்களை ,பெண்ணடிமைத்தனம்,பகுத்தறிவு போன்ற கருத்துக்களை சினிமாவில் கொண்டுவந்தனர் .அதனால் இவர்கள் தலைவர் .ரஜினி ,விஜய் ,அஜித் போன்ற நடிகர்கள் தலைவர்களா ? நடிகர் அஜித் தன்னை தல,என்று அழைக்காதீர்கள் என ரசிகர்களிடையே சொல்லிவிட்டார்.அவர் தனது ரசிகர்களுக்கும் அறிவுரை கூறிவிட்டார் .

அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் .இனத்தின் விடுதலைக்காக போராடுபவர் தலைவர் .சேகுவாரா ,ஆப்ரகாம் ,லெனின் ,பிரபாகரன் ,அம்பேத்கார், காமராஜர் ,சிங்கார வேலன்,தி .மு .க தலைவர் ஸ்டாலின் ,அண்ணா சீமான் தலைவர் .ரஜினிகாந்த் ,விஜய் எப்படி தலைவர் ? என சாட்டை துரைமுருகன் வெளுத்து வாங்கியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website