இரத்த வெள்ளை அணுக்களை அலர்ட் செய்யும் இஞ்சி…அதன் அற்புதமான சில மருத்துவ குணங்கள் என்னென்ன ..!!

February 22, 2023 at 6:23 am
pc

இஞ்சி உணவை சுவையாக மாற்றுவதுடன் பல மருத்துவ குணங்களும் நிறைந்தது. அதன் அற்புதமான சில மருத்துவ பண்புகளை அறிந்து கொள்ளலாம்
சமையலறையில் இன்றியமையாத பொருளாக பயன்படுத்தப்படும் இஞ்சி உணவின் சுவையை அதிகரிப்பதோடு மருத்துவ குணங்களும் நிறைந்தது. இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து நம்மை காக்கிறது உடலை உள்ளே இருந்து வெப்பமாக்கி நன்மை பயக்கும் இஞ்சியின் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. மேலும் இதயத்தை தீவிர நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. சமீபத்தில், உணவு முறை உயிரியலுக்கான லீப்னிஸ் மையம் நடத்திய ஆய்வில், இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதில் ஒரு சிறிய அளவு இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளது.


இஞ்சியில் உள்ள அபரிமிதமான மருத்துவ குணங்களால் உலகம் முழுவதும் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இஞ்சியின் ஆண்டு இறக்குமதி கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதே சமயம், ஜெர்மனியின் லேப்னிட்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் இஞ்சி பற்றிய சமீபத்திய ஆய்வில், இஞ்சி டீ குடித்த அரை மணி நேரத்திற்குள், அதன் கலவைகள் இரத்தத்தில் சேரும் என்று தெரியவந்துள்ளது. அவை இரத்தத்தை அடைவதன் மூலம் வெள்ளை இரத்த அணுக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கின்றன.


இஞ்சியை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் :

இதயத்தை நோய்களில் இருந்து பாதுகாக்கிறது :


இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இதனுடன், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இது இரத்த லிப்பிட்களை குறைக்கிறது. இதனால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.


புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது :


இஞ்சியில் உள்ள செல்களைப் பாதுகாக்கும் பண்புகள் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. செல்லுலார் செயல்பாட்டை குறைக்கிறது. இது குறித்து இன்னும் நிறைய ஆய்வுகள் செய்து, மேலும் விபரங்களை பெற வேண்டியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


எடை குறைக்க உதவும் இஞ்சி :


சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், உடல் எடையை குறைக்க இஞ்சி சிறப்பாக செயல்படுகிறது என தெரியவந்துள்ளது. இதை சரிவிகித உணவாக உட்கொள்வது நன்மை பயக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website