இர்பான் வீட்டில் நடந்த விசேஷம்..வாழ்த்தும் ரசிகர்கள்!



யூடியூப் மூலம் பிரபலமாகி அதன் பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் போட்டியாளராக தற்போது இருக்கும் இர்ஃபான் வீட்டில் வளைகாப்பு விசேஷம் நடந்ததை அடுத்து இது குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
யூடியுப் மூலம் பிரபலமடைந்த இர்ஃபான் பல திரை உலக நட்சத்திரங்களுடன் நெருக்கமாக இருப்பவர் என்பதும் குறிப்பாக ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த போது படப்பிடிப்பு தளத்துக்கு சென்று வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் இர்ஃபானுக்கு திருமணம் நடந்த நிலையில் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பது தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது மனைவி ஆசிஃபா கர்ப்பமானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
இந்த வளைகாப்பு குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்திருக்கும் நிலையில் அவரது மனைவி கிட்டத்தட்ட கிலோ கணக்கில் நகை போட்டு இருப்பதாக கமெண்ட் பதிவாகி வருகின்றன. இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இர்ஃபான் தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை துபாயில் உள்ள ஸ்கேன் சென்டரில் தெரிந்து கொண்டதாக கூறி ஒரு விழா நடத்தினார். அது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.