இலங்கை தமிழரான நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்த நடிகர் தனுஷ்!

September 25, 2022 at 3:47 pm
pc

இலங்கை தமிழரான நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு உடனடி உதவியை நடிகர் தனுஷ் வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் போண்டாமணி. காதீஸ்வரன் என்ற இயற்பெயரை கொண்ட இவர் ஒரு இலங்கை தமிழராவார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் போண்டா மணி, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை ஓமந்தூரர அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பணமில்லாமல் தவிப்பதாக அவர் தெரிவித்த நிலையில் தொடர்ந்து நடிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் பலர் அவரை சந்தித்து, உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் போண்டா மணியின் மருத்துவ சிகிச்சைக்காக 1 லட்சம் கொடுத்து உதவி செய்திருக்கிறார். இதனையடுத்து தாங்கள் அனுப்பிய பணம் மிகவும் உதவியாக இருந்ததாகவும், இந்த உதவிக்கு நன்றி என்றும் கூறி வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website