இலங்கை தமிழருக்கு நடிகர் அஜித்குமார் தந்த சர்ப்ரைஸ்!!வைரல் வீடியோ…

June 30, 2022 at 12:52 pm
pc

இலங்கை தமிழரான தனது ரசிகருக்கு லண்டனில் இருந்தபடி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு பைக் ரேசர் குழுவுடன் சேர்ந்து பைக்கில் லண்டனைச் சுற்றி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. 

இந்நிலையில் நடிகர் அஜித் தனது ரசிகர் ஒருவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறும் ஓடியோ மற்றும் கடிதம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ரசிகருடனான தொலைபேசி உரையாடலையும், ரசிகருக்கான வாழ்த்து கடிதத்தில் அஜித் கையொப்பமிட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

அந்த ஓடியோவில், லவன் என்ற இலங்கை ரசிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய கூறிய அஜித், சந்தோசமா இருங்க, ஆரோக்கியமா இருங்க… நேரில் மீட் பண்ணுவோம் என கூறினார்.

இதையடுத்து நீங்க எப்படியிருக்கீங்க என ரசிகர் கேட்க, நான் நன்றாக இருக்கிறேன் என அஜித் சொன்னார். அதற்கு, நீங்கள் நன்றாக இருந்தால் எனக்கு போதும் என ரசிகர் நெகிழ்ச்சியுடன் சிரித்தபடி சொன்னார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website