இளமையாக இருக்க..முதுமை வராமலே செய்துவிட புதிய ஆராய்ச்சி!

August 31, 2022 at 7:26 pm
pc

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் இறப்பது உறுதி. எல்லோரும் முதுமையை அனுபவித்தே தீர வேண்டும் என்பது இயற்கை. இளமையாக இருக்க வேண்டும்‌ என்பது எல்லோருக்குமே ஆசைதான்‌. சீக்கிரம்‌ முதுமை வந்து மூடாமல்‌, நிறுத்தி வைக்கலாம்‌. பிறகு முதுமையிலும்‌ இளமையாக வாழலாம்‌, முதுமை வராமலே செய்துவிட முடியும்‌ என்பது அல்ல. மனிதன் முதுமையடையாமல் நீண்ட நாட்கள் வாழக்கூடிய வழிமுறைகளை உலக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை அதற்கு பதில்கள் எதுவும் இல்லை.

விஞ்ஞானிகள் இப்போது அழியாத ஜெல்லிமீன்களை அவர்கள் ஆய்வு எடுத்து கொண்டு உள்ளனர். மீண்டும் மீண்டும் இளமை நிலைக்குத் திரும்பும் திறன் கொண்டது ஜெல்லி மீன்கள். விஞ்ஞானிகள் ஜெல்லிமீன்கள் மரணத்தைத் தவிர்க்கும் அளவிற்கு அதன் நீண்ட ஆயுளை நீட்டிக்க பங்களிக்கும் பல்வேறு மரபணு வரிசைகளை வரையறுத்துள்ளனர். டாக்டர் கார்லோஸ் லோபஸ்-ஓடின் தலைமையில். 

ஸ்பெயின் நாட்டின் ஓவியேடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த , விஞ்ஞானிகள் குழு தனித்துவமான ஜெல்லிமீன்களின் மரபணு வரிசையை வரைபடமாக்கி உள்ளது. இதன்மூலம் ஜெல்லிமீன்களின் தனித்துவமான நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தைக் கண்டறிலாம் என்றும் மனித முதுமைக்கான புதிய தடயங்களைக் கண்டறிய முடியும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். ஜெல்லிமீன்கள் பாலியல் ரீதியாக இனப்பெருக்கம் செய்கின்றன. பல வகையான ஜெல்லிமீன்கள் முதுமையை மாற்றும் மற்றும் லார்வா நிலைக்கு மாற்றும் திறன் கொண்டவை என்றாலும், பெரும்பாலானவை பாலியல் முதிர்ச்சியை அடைந்தவுடன் இந்த திறனை இழக்கின்றன. 

இது குறித்து டாக்டர் கார்லோஸ் லோபஸ் கூறியதாவது:- நாங்கள் மனிதன் அழியாமல் இருக்கும் வழிகளை தேடவில்லை. ஆனால் இந்த் ஆய்வு கவர்ச்சிகரமானவற்றின் திறவுகோல்களையும் வரம்புகளையும் புரிந்துகொள்வதாகும். ஆனால் இன்று நம்மை மூழ்கடிக்கும் முதுமையுடன் தொடர்புடைய எண்ணற்ற நோய்களுக்கு சிறந்த பதில்களைக் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம் என கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website