ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு மொறு மொறுனு ஆனியன் ரிங்ஸ் செய்யலாம் வாங்க ….!!

October 10, 2022 at 6:49 am
pc
தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் – 5,
மைதா மாவு – 200 கிராம்,
சில்லி பிளேக்ஸ் – 2 தேக்கரண்டி,
ஆரிகனோ – 2 தேக்கரண்டி,
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி,
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி,
பூண்டு – 8 பல்,
தண்ணீர், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,
ரொட்டித் தூள் – 100 கிராம்.

செய்முறை :

வெங்காயத்தை வட்டமாக வெட்டி, தனித்தனி வளையங்
களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதில் சிறிது மைதா மாவைத் தூவி கிளறி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா, சில்லி பிளேக்ஸ், ஆரிகனோ, மிளகுத்தூள், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, உப்பு, நசுக்கிய
பூண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
பின்பு வெங்காயத் துண்டுகளை ஒவ்வொன்றாக அந்த மாவில் தோய்த்து, ரொட்டித்தூளில் நன்றாக புரட்டி எடுத்து, எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க ஆனியன் ரிங்ஸ் தயார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website