உங்க கரை பிடிச்ச பல்லை பளிச்சினு மாத்த சூப்பரான சொலுஷன் …அது என்னனு தெரிஞ்சிக்கலாம் வாங்க …!!

November 12, 2022 at 4:54 pm
pc

பற்களில் கரை உண்டாவது, பற்களின் தோற்றம் மற்றும் அழகில் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. பாக்டீரியா தொற்றுக்களினால் உண்டாகிற இந்த வகையான பற்காரைகள் பற்களை சேதப்படுத்துவதோடு ஈறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் காரணமாக அமைகிறது.

பற்களில் உள்ள காரையை போக்க செய்ய வேண்டியவை

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவதை கட்டாயமக செய்ய வேண்டும். சிலர் அவசரகதியில் அரை நிமிடத்துக்கு மேல் பல் துலக்கமாட்டார்கள். ஆனால் குறைந்தது 2 நிமிடங்களாவது பற்களை நன்கு தேய்த்து துலக்க வேண்டியது அவசியம்.

மென்மையான டூத் பிரஷ்களைப் பயன்படுத்த வேண்டும். சமீப காலங்களில் நிறைய எலக்ட்ரானிக் ப்ரஷ்கள் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. அவை சாதாரணமாக கைகளில் பிரஷ்களை பயன்படுத்தி துலக்குவதை விட நன்றாக அழுக்குகள் மற்றும் பல் கறைகளை நீக்கும்.

பற்களில் உள்ள கறைகளை முழுவதுமாக நீக்க வேண்டுமென்றால் அதற்கு ஃப்ளூரைடு கலந்த டூத் பேஸ்ட்டுகளை வாங்கிப் பயன்படுத்தி வேண்டும்.

தினமும் வாய் கொப்பளிக்கும் போது ஆன்டி செப்டிக் கொண்ட மௌத் வாஷ்களை பயன்படுத்துங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website