உங்க ரேஷன் கார்டில் உள்ள இந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?? கட்டாயம் தெரிஞ்சுக்குங்க.!!

May 18, 2022 at 6:07 am
pc

நாம் பயன்படுத்தும் ரேஷன் அட்டை ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் பல வித்தியாசங்கள் உள்ளது.

அதில் சில குறியீடுகளை அரசாங்கம் வைத்திருக்கும். அதற்கான அர்த்தங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

ரேஷன் அட்டை நமக்கு ஒரு அடையாள அட்டையாக இருந்து வருகிறது.

தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் ஒரு அட்டையை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன.

குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் கார்டும் ஒன்று போல் இருந்தாலும், அதன் குறியீட்டு மூலம் தான் எந்த வகை அட்டை என்பதை அறிய முடியும்.

PHH (Priority house hold) – முன்னுரிமை உள்ளவர்கள்:
உங்கள் ரேஷன் கார்டில்
PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் 8 கிலோ அரிசியை மாதத்திற்கு பெற்று கொள்ளலாம். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன.

PHH – AAY ( Priority house hold- Antyodaya Anna Yojana):
இந்த வகையான ரேஷன் கார்டுகள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தரப்படும்.

இவர்களுக்கு 35 கிலோ அரிசி குறைந்த விலையில் வழங்கப்படும். மேலும் இந்த வகையான அட்டைகள் விதவை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு வழங்கப்படும். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

NPHH ( Non Priority House Hold) – முன்னுரிமை இல்லாதவர்கள்:
உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 90,08,842 கார்டுகள் உள்ளன.

NPHH-S:
ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம். இந்த கார்டை 10,01,605 குடும்பங்கள் வைத்துள்ளனர்.

NPHH-NC:
ரேஷன் கார்டில் இந்தக் குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website