உங்க வேலையை சுலபமாக்க பயனுள்ள சமையல் டிப்ஸ்…!இத ஃபாலோ பண்ணுங்க….!!

June 10, 2022 at 7:09 am
pc
  • காய்ந்த மிளகாயை வறுக்கும் போது காரம் ஏறும். அது வராமல் இருக்க சிறிதளவு கல் உப்பு போட்டு வறுத்தால் காரம் குறையும்.
  • வெண்டைக்காய் பொறியல் செய்யும் போது புளித்த மோர் வீட்டில் இருந்தால் சிறிதளவு சேர்த்து பொறியல் செய்தால், வெண்டைக் காய் மொறுமொறுவென்று இருக்கும்.
  • சப்பாத்தி, பூரி செய்யும் போது கோதுமை மாவில் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து மாவு பிசைந்து செய்தால், சப்பாத்தி மெதுமெதுனும், பூரி நல்லா பொசுபொசுனும் வரும். அதுமட்டுமல்லாமல், டேஸ்ட் அல்லும்.
  • கன மில்லாத மெலிதான கல்லை சப்பாதிக்கும், அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும் பயன்படுத்த வேண்டும்.
  • காய்கறிகளை வேகவைக்கும் போது அதிகமாக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏனெனில், காய்கறிகளில் இருக்கும் மனமும் சத்துக்களும் தண்ணீரிலையே போய்விடும்.
  • மைதா, ரவா உள்ள டப்பாவில் புழு, பூச்சி விழாமல் இருக்க கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் போதும். பூச்சி, புழு வரவே வராது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website