உடலுக்கு டீ நல்லதா..? காபி நல்லதா ..? உங்க நீண்ட நாள் கேள்விக்கான பதில் இதோ…!!

December 24, 2022 at 11:57 am
pc

இன்றைய நிலையில் காலையில் எழுந்ததும் சிலர் காபீ, டி கோப்பையில் தான் கண் விழிப்பார்கள். பலருக்கும் மனதில் எழும் கேள்வி எது நல்லது? காபியா? டீயா? என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

டீ குடித்தால் சில புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதோடு ரத்தத்தில் உள்ள சக்கரையும் அளவை குறைக்க டி உதவுகிறது. ஒரு கப் டீயில், காப்பியை விட குறைவான ‘காப்பேன்’ இருக்கிறது.

அதனால் கொழுப்பை (கொலஸ்ட்ரால்) பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கப் டீயுடன் நிறுத்திக் கொள்வது நல்லது. அதிகமாய் குடிப்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து விடக்கூடும்.

சிலர் டீயை கொதிக்க கொதிக்க அப்படியே அருந்துவார்கள். இப்படியே தொடர்ந்தால் தொண்டையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.

டீயை விடவும் காபியில் ‘காபீன்’ அதிகம் என்பதால் டீயை விட சிறப்பாகவும் வேகமாகவும் அதிக செயல்திறனைக் கொண்டதாகவும் இருக்கும். டீ அருந்துபவர்களுக்கு ஏற்படும் சுறுசுறுப்பை விட காப்பியில் அதிகம்.

குறிப்பாக டிகாஷன் காபிக்கு நகர்ப்புறத்தில் பிரியர்கள் அதிகம். வடிகட்டப்பட்ட ‘பிளாக் காபிக்கு’ அல்சைமர்ஸ், பெருங்குடல், புற்றுநோய், சர்க்கரை நோய் ஆகியவற்றை தடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே டீயை விட காபியை அதிகம் குடியுங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website