உடலுறவின்போது இந்த விஷயங்களை பேசினால் பேரின்பத்தின் எல்லைக்கு செல்லலாம் ..

May 15, 2022 at 7:57 pm
pc

மனிதர்களின் இனப்பெருக்கத்திற்கு வழிவகையாக செக்ஸ் அமைகிறது என்பதோடு மட்டுமல்லாமல், உடல், மனம் என இரண்டும் ஒரே சமயத்தில் பேரின்பம் காண்பதற்கான உத்தியாகவும் இது இருக்கிறது. செக்ஸ் என்றாலே குதூகலமாக விஷயம் தான். அதே சமயம், செக்ஸ் உறவின்போது ‘டர்ட்டி டாக்’ என்று சொல்லக் கூடிய, ஆபாசமான பேச்சுகளை நீங்கள் பேசும் போது, உங்களுக்கான இன்பம் மேலும் அதிகரிக்கும். குறிப்பாக, உடலின் உணர்வுகளை தூண்டுவதற்கும், செக்ஸ் மூலமாக கிடைக்கும் இன்பத்தை அதிகரிக்கவும் இந்த ஆபாசமான பேச்சுக்கள் உதவிகரமாக இருக்கும். உங்கள் பார்ட்னருடனான அனுபவத்தை மேலும் சிறப்புக்கு உரியதாக மாற்றுவதற்கு ஆபாச பேச்சு உதவியாக இருக்கும். அப்படி என்ன விஷயங்கள் பேசலாம் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

உத்தரவிட சொல்லுங்கள் : செக்ஸ் உறவின்போது, ஆண் அல்லது பெண் இருவரில் யாரேனும் ஒருவர் தான் ஆக்டிவ் பார்ட்னராக செயல்படுகின்றனர். மற்றொருவர் அதை அனுபவிக்கக் கூடியவராக இருக்கிறார். ஆக்டிவ் பார்ட்னர் தன்னுடைய விருப்பம் எதுவோ அதை செய்யக் கூடியவராக இருக்கிறார். மாறாக, “நான் என்ன செய்ய வேண்டும் சொல், தயங்காமல் செய்கிறேன்’’ என்று பார்ட்னரின் உத்தரவுகளை கேட்டு செயல்படலாம். அதாவது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பார்ட்னர் வழிகாட்டும் போது, அதற்கேற்ப நீங்கள் செயல்படலாம். 

உங்கள் இன்பத்தை விளக்கமாக சொல்லுங்கள் : உங்கள் பார்ட்னர் உங்களுடன் இணைந்திருக்கும்போது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் என்னென்ன இன்பம் கிடைத்தது என்பதை ரசனையுடன் விவரித்து சொல்லலாம். இதனால், உங்கள் பார்ட்னரின் மனதையும், உடலையும் ஊக்குவிப்பதாக அது அமையும். மேலும், உங்களுக்கு பிடித்தமானதை தெரிந்து கொண்டதால், அவற்றை செய்ய அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். 

பாராட்டுங்கள் : உங்கள் பார்னரின் நடத்தைகளில் உங்களுக்கு என்னென்ன பிடித்திருக்கிறதோ, அதுகுறித்து உடனடியாக பாராட்டுங்கள். இது அவர்களது நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் உறவின்போது புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள். 

முத்தங்கள் : உப்பு இல்லாமல் உணவு அமையாது என்பதைப் போல, முத்தங்கள் இன்றி உடலுறவு இருக்காது. அதேசமயம், இதில் எந்த அளவுகோளும் தேவையில்லை. உங்கள் முத்தம் லேசாக அல்லது முரட்டுத் தனமாக அல்லது இன்பம் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். நீங்கள் ரசனையோடு கொடுக்கும் முத்தங்களில் உங்கள் பார்ட்னர் மெய்மறக்க வேண்டும். 

கிளுகிளுப்பாக பேசுதல் : செக்ஸ் உறவின்போது, நாகரீக எல்லைகளை கடந்து கிளுகிளுப்பாக பேசுவது, மனதில் உள்ள ஆசையையும், உடல் இயக்கத்தின் வேகத்தையும் அதிகரிக்கும். குறிப்பாக, ஆண் அல்லது பெண் என யார் ஒருவர் உச்சகட்டம் அடையும் நிலையில் இருந்தாலும், அப்போது மிகுந்த முனகலுடன் கிளுகிளுப்பாக பேசுவது என்பது பேரின்பத்தின் எல்லைக்கு உங்களை கொண்டு செல்லும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website