உடல் ஆரோக்கியத்திற்கு தினம் ஒரு முட்டை!

August 28, 2022 at 8:48 am
pc

அசைவப் பிரியர்களின் உணவுப்பட்டியலில் முக்கிய இடம் முட்டைக்கு உண்டு. பலருக்கும் பிடித்த உணவாக உள்ள முட்டையில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. அதிலும் வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும்.

மூளை திறன்

தினமும் வேகவைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் நமது மூளை வேகமாக செயல்படும். படிக்கும் மாணவர்களுக்கு வேக வைத்த முட்டை சாப்பிட கொடுத்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

கல்லீரல்

உடல் உறுப்புகளில் மிக பெரிய உறுப்பான கல்லீரல் பாதிக்கப்பட்டால் மரணம் மிக சீக்கிரத்தில் நம் வீட்டு கதவை தட்டும். கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்றினாலே கல்லீரல் பாதிப்பு இல்லாமல் இருக்கும்.

வேக வைத்த முட்டையை தினமும் காலையில் 1 வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் இதன் பலன் உங்களுக்கு கிடைக்கும்.

விரைவில் கருத்தரிக்க வாய்ப்பு

வேக வைத்த முட்டையை காலையில் சாப்பிட்டு வரும் தம்பதியினர் மிக விரைவிலே கருத்தரிக்க வாய்ப்பு அதிகம்.

உடல் எடை

தற்போது எவ்வளவு பாடுபட்டாலும் எடை குறையவில்லையா? உங்களின் இந்த பிரச்சினையை தீர்க்க வேகவைத்த முட்டை உள்ளது. காலை உணவில் வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் மிக எளிதாக உடல் எடை குறையுமாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website