உடல் உபாதைகளை போக்கும் அங்காயப் பொடிசெய்வது எப்படி ….!!
தேவையான பொருட்கள்
வேப்பம்பூ – ஒரு டேபிள்ஸ்பூன்
சுண்டக்காய் வற்றல் – ஒரு டேபிள்ஸ்பூன்
மணத்தக்காளி வற்றல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு – ஒரு டீஸ்பூன் .
திப்பிலி – 6 .
சீரகம் ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 4.
துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம் சிறிதளவு,
தனியா ஒரு டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு…
செய்முறை
இவை அத்தனையும் உலர்த்தி வறுத்து, பருப்புப் பொடி செய்வது போல் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும், சுடுசோற்றில். குறிப்பாக வரகரிசி சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயுடன், கொஞ்சம் ஊற்றிப் பிசைந்து அப்பளம் மற்றும் தயிர்பச்சடியுடன் சாப்பிடலாம்.