உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்!

February 6, 2023 at 8:30 am
pc

பொதுவாகவே எல்லோருக்கும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக உள்ளது. உடல் எடையை குறைக்க மிக முக்கியமானது உடற்பயிற்சி, உணவு முறை தான் இவற்றை திட்டமிட்டு செய்வதன் மூலம் உங்கள் உடல் எடையை குறைத்துக் கொள்ள முடியும்.

அப்படி நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் ஒரு சில பழங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றது. அவற்றை அன்றாடம் எடுத்து கொள்வதன் மூலம் நிச்சயம் உடல் எடையை எளிய முறையில் குறைக்கலாம்.

அந்த வகையில் தற்போது அந்த பழங்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

உண்ண வேண்டிய பழங்கள்

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் உண்ணுவதால் உயர் கொலஸ்ரோலைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கச்செய்கிறது.

பெர்ரி பழங்களில் குறைந்த கலோரிகளும் அதிக ஊட்டச்சத்துக்களும் நிறைந்து உள்ளதால் மூலம் அதிகளவு உடல் எடையைக் குறைக்க முடியும்.

பிளம் மற்றும் பீச் பழங்கள் எடுத்து கொள்ளலாம். இவற்றில் விட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக இருப்பதால் பசியைக் கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும்.

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் சாப்பிட்டதும் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழம் கண்டிப்பாக சாப்பிடலாம்.

ஆணைக்கொய்யாவில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் இருந்தாலும் சர்க்கரை அளவு மிகக் குறைவு என்பதால் இது எடையை குறைக்க உதவி செய்கிறது.

தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட பழங்களை நாம் சாப்பிடலாம். இவற்றில் நீர்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் இது எடையை விரைவில் குறைக்க உதவுகின்றது.

உண்ணக்கூடாத பழங்கள்

மாதுளம்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் சர்க்கரை அளவை உடனடியான உயர்த்தும் அதனால் அது எடையையும் அதிகரிக்கும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மாதுளம்பழத்தை தவிர்ப்பது நல்லது.

திராட்சையிலும் மாம்பழத்திலும் சர்க்கரை அளவு சற்று கூடுதலாக இருக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் திராட்சை மற்றும் மாம்பழங்களையும் தவிர்ப்பது நல்லது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website