உடல் சூடு உடல் உஷ்ணம் தலை பாரம் குறைய அபூர்வ மூலிகை எண்ணெய்:

May 23, 2022 at 4:07 pm
pc

தேவையான மூலப்பொருட்கள்
1.அகில் கட்டை – 100 கிராம்
2.நல்லெண்ணை – 250 மி
3.அதிமதுர தூள் – 50 கிராம்
4.தான்றிக்காய் தூள் – 50 கிராம்

செய்முறை

அகில் கட்டையை சிறு சிறு தூளாக நறுக்கி பொடி செய்து கொள்ளுங்கள். நல்லெண்ணை ஒரு வாணலியில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் எண்ணையில் அகில்,அதிமதுரம், தான்றிக்காய் தூள்களை கலந்து சுண்ட காய்ச்சவும் நன்கு சுண்டி கருமை நிறம் ஆகும் வரை கொதிக்க வைக்கவும் .

பயன்படுத்தும் முறை:

காலை வெயில் நேரத்தில் தலையில் இந்த எண்ணெய் தேய்த்து நன்கு ஊறிய பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்குளிர்ந்த நீர் கூடாது…எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்களில் மோர்,எலுமிச்சை,குளிர்பானங்கள் கூடாது

மருத்துவ பயன்கள்:
1.கண் எரிச்சல் நீங்கும்
2.உடல் சூடு அடியோடு குறையும்
3.வயிறு எரிச்சல் நீங்கும்
4.பாத வலி உடல் வலி எரிச்சல் சரியாகும்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website