உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயக் குழம்பு!

August 7, 2023 at 10:03 pm
pc

உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் புதிது புதிதாக வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது. தினமும் உணவில் வெந்தயம் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சியைத் தரும். மேலும், உடம்பில் சர்க்கரையின் அளவை குறைக்க வெந்தயம் பெரிதும் உதவுகிறது. வெந்தயத்தை குழம்பாக வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். வெந்தயக் குழம்பு வைப்பது மிகவும் எளிது. இப்போது வெந்தயக் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கடுகு – 1/4 மேசைக்கரண்டி

சீரகம் – 1/2 மேசைக்கரண்டி

வெந்தயம் – 2 மேசைக்கரண்டி

பூண்டு – 10 பற்கள்

சின்ன வெங்காயம் – 25

தக்காளிப்பழம் – 2

காய்ந்த மிளகாய் – 3

கறிவேப்பில்லை – தேவையான அளவு

கொத்தமல்லி இலை

மஞ்சள் தூள்

குழம்பு தூள் – 2 மேசைக்கரண்டி

புளி (எலுமிச்சை அளவு)

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம்

செய்முறை

முதலில் வெந்தயம், சீரகம் இரண்டையும் நன்றாக வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 

பிறகு சட்டியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பூடு, கருவேப்பில்லை வெங்காயம், தக்காளி சேர்த்துக் கொள்ளவும். 

பின்பு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், குழம்பு தூள் எல்லாம் சேர்த்து நன்றாக கிளறவும்.

சிறிது நீர் சேர்த்து அதனுடன் புளி கரைத்த நீரை ஊற்றி முடி வைக்கவும். நல்ல திக்காக வரும் வரை மூடி வைக்கவும். 

பிறகு பொடியாக அரைத்து வைத்த வெந்தயம், சீரகம் தூளை சேர்த்து அதனுடன் கொத்தமல்லி இலையையும் துவி நன்றாக கிளறவும். 

இப்போது சூப்பரான வெந்தயக் குழம்பு ரெடி. இப்போது வீட்டில் அனைவருக்கும் பரிமாறலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website