உணவில் பச்சைப் பயிறை சேர்த்துக் கொண்டு வருவதால் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா …?

October 4, 2022 at 5:19 pm
pc

தமிழர்களின் தினசரி உணவில் பருப்பு வகைகள் இல்லாமல், சமையல் இல்லை என்றே கூறும் அளவுக்கு, உணவில் பருப்புகளின் பயன்பாடு மிருந்திருக்கும். தமிழர்களின் மதிய உணவில், பருப்பு எனும் வேகவைத்த துவரம் பருப்பே, சாப்பாட்டில் முதலிடம் பெற்றிருக்கும், (அழகும் ஆரோக்கியமும்) இந்த குழைத்த பருப்பில் நெய் ஊற்றி சாப்பிடும்போது, உணவை செரிக்க வைத்து, இதர காரமான உணவு வகைகள் வயிற்றை பாதிக்காத வண்ணம், உடலைக் காக்கவே, இந்த பருப்பை ஒரு ஸ்டார்ட்டர் எனும் செயலாக, உணவில் முதலில் உண்டு வந்தனர்.

மேலும் சாம்பாரில் வேக வைத்து இடும் துவரம் பருப்பு முதல், கூட்டு, பொரியல்களில் அவை எந்த காய்கறியில் செய்யப்பட்டிருந்தாலும், அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு இவற்றை இட்டு தாளித்தே, அந்த துணை உணவுகளை பரிமாறுவர். (அழகும் ஆரோக்கியமும்) பருப்பு வகைகளில் அதிக அளவில் ஊட்டச் சத்துக்கள் இருப்பதாலும், மேலும் அவற்றில் உள்ள புரதச் சத்துக்கள் உடலுக்கு நன்மைகள் செய்வதாலும், நாம் தினசரி உணவில் பருப்பு வகைகளை சேர்த்து, உண்டு வருகிறோம்.

இந்த வகையில், பச்சைப் பயிறு மிக சிறந்த அளவில் மனிதருக்கு பலன்கள் தர வல்லவை. எனவே தான் அக்காலங்களில், உணவு வகைகளில் மட்டுமன்றி, (அழகும் ஆரோக்கியமும்) இதர இனிப்பு மற்றும் கார வகைகளில், நிறைய பலகாரங்கள் செய்து கொடுத்து, குழந்தைகளின் மாலைநேரத் தீனியை அவர்களின் வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் துணைபுரியும் பயிறு வகைகளைக் கொண்டு, செய்து தந்தனர்.

அதிகம் தண்ணீர் தேவைப்படாத பயிர் வகைகளில் ஒன்றான பச்சைப் பயிறு எல்லா வகை நிலங்களிலும் விளையக்கூடியது. சிறு செடிகளாக வளரும் இவற்றை அறுவடைப் பருவம் வந்ததும், சிறிய பீன்ஸ் வடிவில் இருக்கும், காய்களைப் பறித்து, காய வைத்து அதன் பின், அவற்றை அடித்து, பயறுகளை சேகரிப்பர். (அழகும் ஆரோக்கியமும்) பயறு அறுவடைக்கு பின் ஆறு மாதங்கள் கழித்தே, உணவில் சேர்த்துக் கொள்ள சிறப்பாகும். பயிறு ஓராண்டு காலம் வரை அதன் தன்மை மாறாமல், வளமுடன் இருக்கும்.

பயறு சாப்பிடுவோருக்கு பசியைத் தூண்டி, நல்ல ஊட்டமும், உடலுக்கு பலமும் தரும், இரத்த அழுத்த பாதிப்புகளை சரி செய்து, சிறுநீரை சீராக வெளியேற்றும், உடலின் பித்த கபத் தன்மைகளை சீராக்கும். உடலில் எளிதில் செரிமானமாகும் தன்மையுள்ள பயிறுகளில், உடலுக்கு நன்மைகள் தரும் அநேக வைட்டமின், அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, ரிபோ புளோவின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. (அழகும் ஆரோக்கியமும்) உடலுக்கு வியாதி எதிர்ப்பு தன்மை தரும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இதில் மிகுந்துள்ளது. இதனால், பச்சைப் பயிரை உணவில் அவ்வப்போது சேர்த்து வர, உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி உண்டாகி, உடலை வலுவாக்கி, சருமத்துக்கும், கேசத்துக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் அகற்றி, உடலை நலமுடன் செயல்பட வைக்கும்.

இரத்த சோகை, பெண்களை அதிகம் பாதிக்கும் ஒரு மோசமான வியாதியாக இருந்து வருகிறது, இந்த இரத்த சோகையினால் பெண்கள், உடல் தளர்ச்சி, அசதி மற்றும் பல இன்னல்களை அடைந்து வருகின்றனர். (அழகும் ஆரோக்கியமும்) இந்த பாதிப்புகளை சரிசெய்ய, தினசரி உணவுகளில் பச்சைப் பயிறை பயன்படுத்தி, உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைத்து, இரத்த சோகை நீங்கி, நலமாகலாம்.
.
சிலருக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பு அதிகம் கலந்து, இரத்த அழுத்த பாதிப்புகள் உண்டாகலாம், அவர்களும் பச்சைப் பயிறை உணவில் சேர்த்து, பாதிப்புகள் நீங்கி, நிம்மதி அடையலாம்.

உடல் பருமன் தற்காலத்தில் அதிகம் மனிதர்களை பாதிக்கும் ஒரு உடல் வியாதியாகிவிட்டது. மேற்கத்திய உணவுகள், துரித உணவுகள் போன்ற நமது உணவு முறைக்கு ஒவ்வாத உணவு வகைகள் மற்றும் வேறு சில பாதிப்புகளாலும், உடல் பருமன் ஏற்படக்கூடும். (அழகும் ஆரோக்கியமும்) இந்த உடல் பருமன் அவர்களின் அன்றாடப் பணிகளை பாதிக்கும் அளவிற்கு வந்த பின், இந்த உடல் பாதிப்பை குறைக்க மிகவும் முயற்சி செய்வர். அவர்கள் எல்லாம், தினமும் வேக வைத்த பச்சைப் பயிறை இருவேளைகள் சாப்பிட்டு வந்தால், அதிக உடல் எடை காணாமல் போய், இயல்பான உடல் எடையுடன் மகிழ்ச்சியாக காணப்படுவர்.

சிறுவர்கள் சிறுமியர் நன்கு வளரவும், உடல் தெம்புக்கும், அவர்களுக்கு செயற்கையான ஊட்டச்சத்து பானங்கள் அளித்து அவர்களின் உடல் வளத்தை பாதிக்கச் செய்யாமல், (அழகும் ஆரோக்கியமும்) இயற்கை தந்த பச்சைப் பயிறு மாவை, சர்க்கரையில் இட்டு அந்த பானங்களை போல பாலில் கலந்து பருகி வர, குழந்தைகள் இயற்கையான முறையில் உடல் ஊட்டம் பெற்று, நன்கு வளருவர்.

மேலும் பச்சைப் பயிறு உணவுகளை தினமும் சாப்பிட்டு வர, தோல் புற்று வியாதிகள் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம். மிக அதிக அளவில் புரதச் சத்து மிக்க உணவான பயிறு, அசைவ உணவிற்கு ஈடான புரதத்தை கொண்டவை. மேலும், முளை கட்டிய பயிரும் மிக அதிக அளவில் மனிதருக்கு நற்பலன்கள் அளிக்க வல்லது. (அழகும் ஆரோக்கியமும்) முளைகட்டிய பயிரை பச்சையாகவே, உண்ணலாம், வாயுத் தொல்லைகள் போக்கும், இல்லையென்றால் வேக வைத்து, உப்பிட்டோ அல்லது வேறு வகைகளில் சமைத்தோ சாப்பிட, உடல் வளமாகும்.

பச்சைப் பயிறை கொதிக்க வைத்த நீரில், இந்துப்பும், மிளகும் சேர்த்து, வியாதிகளிலிருந்து மீண்டு, உடல் நலிந்துள்ளவர்களுக்கு அளித்து வர, உடல் சோர்வு நீங்கி, உடல் வலுப்பெறுவர். (அழகும் ஆரோக்கியமும்) பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்து உடலில் தடவி, சற்று நேரம் கழித்து குளித்துவர, உடல் பொலிவாகும். இதையே, தலைக்கு தடவி குளித்து வர, தலைமுடிகளின் பிசுபிசுப்பு போய் தலைமுடி, மிருதுவாகும்.

வேக வைத்த பச்சைப் பயிறை, சிறிய வெங்காயம், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, இந்துப்பிட்டு, நன்கு பிசைந்து, சப்பாத்தி, தோசை போன்ற சிற்றுண்டிகளுக்கு தொட்டுச் சாப்பிட, உடலுக்கு நல்ல சத்துக்களை அளிக்கும். (அழகும் ஆரோக்கியமும்) சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு உணவு வகை, இதுவாகும்.

பச்சைப் பயிறை வேக வைத்து, சிறிது மிளகு, இந்துப்பு சேர்த்து, சிறிது பச்சை மிளகாய், கடுகு, ஜீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளித்து சிறிது பெருங்காயத்தூள் தூவி, நன்கு கிளறி, மேலே, (அழகும் ஆரோக்கியமும்) தேங்காய் துருவல், கறி வேப்பிலை கலந்து பரிமாற சுவையான, பயிறு சுண்டல் ரெடி, மாலை நேரத்தில், அனைவரும் விரும்பிச் சாப்பிடும், சிறந்த ஊட்டச்சத்துமிக்க பதார்த்தமாகும், இந்த பயிறு சுண்டல்.

பச்சைப் பயிறை வேக வைத்து, வெல்லம் சேர்த்து பாயசம் போல வைத்து பருகலாம், நல்ல சுவையான ஆரோக்கிய பானம் இது. வேக வைத்த பச்சைப் பயிறை கொண்டு, வடை, பக்கோடா போன்ற எண்ணையில் பொரிக்கும் உணவு வகைகள் செய்து சாப்பிடலாம். (அழகும் ஆரோக்கியமும்) பச்சைப் பயிறு மாவை சற்றே வறுத்து, வெல்லம் நெய், ஏலக்காய் பொடி இவற்றை சேர்த்து, உருண்டையாகப் பிடித்துவைக்க, சுவையான பயிற்றம் பருப்பு உருண்டை தயார். இதைப் போல, பயிற்றம் பருப்பு குழம்பு மற்றும் பல உணவு வகைகள் செய்யலாம்.

பச்சைப் பயிறை வேக வைத்த நீரை, உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். அமிர்தமானாலும், அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகிவிடும், எனவே, பச்சைப் பயிறு நமக்கு அதிக அளவில் நன்மைகள் தந்தாலும், அவற்றை நாம் அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது, (அழகும் ஆரோக்கியமும்) அளவுக்கு மீறி பச்சைப் பயிறை, உண்பதால், உடலில் குளிர்ச்சி அதிகரித்து, உடலுக்கு இன்னல்கள் அளிக்க, வாய்ப்புள்ளது. எனவே, சுவாச பாதிப்புகள் கொண்ட மூச்சிறைப்பு போன்ற வியாதிகள் உள்ளவர்கள், பச்சைப் பயிறை குறைந்த அளவில் உண்டு வர, நலம் பெறலாம். வாயுத் தொல்லை உள்ளவர்கள், பயிருடன் இஞ்சி பூண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website