உதடு வெடிப்பு/உதடு எரிச்சல் ஆகியவை நீங்க சூப்பரான டிப்ஸ் ….!!!

October 2, 2022 at 4:27 pm
pc

மருத்துவ குறிப்பு 1 : தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ வேண்டும். மேலும் கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக் குழைத்து தடவ உதடு வெடிப்பு நீங்கும்.

மருத்துவ குறிப்பு 2 : நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து தடவிவர நல்ல பலன் தெரியும். கேரட் சாறு, கிளசரின், பசும்பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகும்.

மருத்துவ குறிப்பு 3 : உதடுகளில் ஈரப்பதம் குறையாமலிருக்க அடிக்கடி நீரையும், பழச்சாறுகளையும் பருக வேண்டும் இது உதடு வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

மருத்துவ குறிப்பு 4 : காலை, மாலை வேளைகளில் ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து உதட்டில் பூசிவர வேண்டும். புண்ணாகிப்போன உதடுவெடிப்புகள் குணமாக நல்லெண்ணெய்யையோ, நெய்யையோ தடவ அப்புண்கள் விரைவில் குணமாகும்.

மருத்துவ குறிப்பு 5 : எலுமிச்சையின் சாற்றை உதட்டுப்புண்கள் ஆறிய பிறகு தடவிவர உதடுகள் பழைய நிறத்தையும், பளபளப்பையும் பெரும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website