உதயநிதியை வம்பிழுத்த பாலாஜி முருகதாஸ்.. இணையத்தில் உருவான கருத்து மோதல்


முன்ஜாமீன் வாங்கிக்கோங்க ப்ரோ என்று நெட்டிசன்கள் அறிவுரை கூறும் அளவிற்கு சமூக வலைதளத்தில் தனது பதிவின் மூலம் ஆளும் தரப்பிற்கு எதிராக நேரடி அட்டாக்கில் ஈடுபட்டுள்ளார் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ். இவரது கருத்திற்கு விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரவும் அறிவுரையும் கொடுத்து வர இன்னொரு பக்கம் ஆளும் கட்சியினர் தங்களது கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் பாலாஜி முருகதாஸ் சமீப நாட்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். ரீசன்ட்டாக “நசுக்கப்பட்டோம் பிதுக்கபட்டோம் என்று வாரிசு நடிர்களை வைத்து படமெடுக்கிறார்கள்” என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.
இந்தக் கருத்திற்கு ரியாக்ட் செய்த ஆளும் தரப்பை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியினர் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை சமூக வலைதளங்களில் வசை பாடி தீர்த்தனர். இதனால் கடுப்பான பாலாஜி முருகதாஸ் தற்பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை குறித்தும் சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டுள்ளது இணையத்தை சற்று சூடாக்கியுள்ளது.
பாலாஜி முருகதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் ‘உதயநிதி ஸ்டாலினுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது..?அவரது தாத்தா ட்ரெயினில் வித்அவுட் டிக்கெட்டில் வந்ததற்கு கைது செய்திருக்க வேண்டும், இப்படி இருக்க எப்படி உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு சொத்து வந்தது!!?? பதில் சொல்லுங்கடா..’ என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும் தனது அடுத்தடுத்த பதிவுகளில் இதே கேள்வியை மீண்டும் கேட்டு ஆளும் தரப்பிற்கு ஆதரவாகவும் தனக்கு எதிராகவும் கருத்துகள் பதிவிடுபவரிடம் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கனவே பாலாஜி முருகதாஸ் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய போவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையே நேரடியாக வம்பு இழுத்து கருத்துகளை பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவிற்கு விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் முன்ஜாமீன் ரெடி பண்ணிக்கோங்க ப்ரோ என்று பாலாஜி முருகதாஸ்க்கு அறிவுரையும் கூறி வருகின்றனர்.