உயிரை கொல்லும் கலப்பட பச்சைபட்டாணி…எச்சரிக்கை பதிவு!!

February 14, 2023 at 8:04 pm
pc

உலகளவில் பச்சை ,மஞ்சள் என பட்டாணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன என சொன்னால் நம்ப முடிகிறதா .ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை .கி .மு 9 ம் நூற்றாண்டிலே மனிதர்கள் பச்சைபட்டாணியை சாப்பிட்டதற்கான ஆதாரம் இருக்கிறது.பச்சை பட்டாணி உலகின் ஆரோக்கியமான உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது .நார்ச்சத்து ,இரும்புச்சத்து எத்தனையோ சத்துக்களை கொண்டுள்ளது பச்சைபட்டாணி .தற்போது பச்சைபட்டாணி நம்மை கலங்கவைக்கிறது.பச்சை பசேல் என தெரிவதற்காக இரசாயனம் சேர்க்கப்படுகிறது .இந்த இரசாயனம்உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது .மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடியது. பச்சையாக தெரிவதற்காக இதில் மலாஸைடு கிரீன் எனப்படும் இரசாயனம் சேர்க்கப்படுகிறது .உலர்ந்த பட்டாணியை தண்ணீரில் ஊற வைத்து விடுகிறார்கள்.இதில் மலாஸைடு கிரீன் கலந்து நிறமேற்றுகிறார்கள் .உலர்ந்த பட்டாணிகளில் மட்டுமல்ல உலராத வகைகளிலும் இந்த கலவை நடைபெறுகிறது .பச்சைமிளகாய், கோவக்காய் போன்றவற்றிலும் இரசாயனம் சேர்க்கப்படுகிறது .இந்த கலப்பட உணவை சாப்பிடுவதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாதிக்கப்படுவர்.

மலாஸைடு கிரீன் எனப்படுவது கிராமங்களில் சாணம் தெளித்து வாசல்களில் கோலமிடுவர் .சாணம் கிடைக்காததால் இதை கலர் பொடியாக பயன்படுத்துவர் .இதை தண்ணீரில் கலந்து வாசலில் தெளிப்பர். சில நாடுகளில் விழ காளான்களை கொல்ல பயன்படுத்தும் இரசாயனம் இது .ஆனால் 1990 களில் உலகளவில் தடை செய்யப்பட்டுவிட்டது. இதைத்தான்இன்றைக்கு பளீச் என நிறமேற்றியாக பயன்படுத்துகிறார்கள் .இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.எதனால் மரபணு மாற்றங்கள் ஏற்படும் .மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டு தன்மை அதிகரிக்கும்.கலப்படமான பச்சைபட்டாணியை கண்டுபிடிக்க ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதை தண்ணீரில் போடுங்கள் .பச்சை நிறம் திரிந்து வந்தாலே அது கலப்படம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website