உலகக்கோப்பை செஸ் போட்டியில் கடுமையாக நெருக்கடி கொடுத்த பிரக்ஞானந்தா! சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சன்

உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.
இளம் தமிழக வீரர்
அஜர்பைஜானில் நடந்து வந்த உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டி, நேற்றைய 2வது சுற்று டிரா ஆனது.
அதனைத் தொடர்ந்து, தமிழக வீரர் பிரக்ஞானந்தாவும், கார்ல்சனும் 1-1 என சமநிலையில் இருந்ததால் வெற்றியாளரை தெரிவு செய்ய இன்று டை பிரேக்கர் சுற்று நடந்தது.
முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தாவுக்கு நேரம் குறைவாக இருந்ததால் அவரால் வெற்றி பெற முடியாமல் போனது.
அதிரடி நகர்த்தலில் கார்ல்சன் வெற்றி
பின்னர் தொடங்கிய 2வது சுற்றில் கார்ல்சன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இதனால் பிரக்ஞானந்தா கடுமையாக போராடினார்.
இருப்பினும் அதிரடியாக காய்களை நகர்த்திய கார்ல்சன் 6வது முறையாக வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
சாம்பியன் வீரருக்கு கடுமையாக நெருக்கடி கொடுத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.