உலகின் சிறந்த உணவு வகைகளில் ஐந்தாவது இடத்தை பிடித்த இந்தியா…

December 28, 2022 at 1:52 pm
pc

எந்த உணவு சாப்பிட்டாலும் நம் நாட்டு உணவுதான் சுப்பர் என்று பல தடவைகள் சொல்லிக்கொண்டே சாப்பிடுவோம். உணவுகளும் அப்படித்தான் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பாரம்பரிய உணவுகளும் சுவைகளும் வேறுபட்டே காணப்படும். பல்கேரியாவை தளமாகக் கொண்ட அனுபவமிக்க பயண வழிகாட்டி இணையதளமான டேஸ்ட் அட்லஸ், ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில், 2022ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில் இந்திய உணவு வகைகள் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய உணவு வகைகளுக்கான சிறந்த பாரம்பரிய உணவகங்களின் பெயர்களையும் உணவு இணையதளம் வெளியிட்டது.

உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலின் படி இத்தாலிய உணவு முதலிடத்தையும் கிரேக்கம் இரண்டாவது இடத்தையும் ஸ்பானிஸ் மூன்றாவது இடத்தையும் ஜப்பானிய உணவு நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்கான பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.

மொத்தமாக இந்தியா 4.54 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. மேலும் 400க்கும் மேற்பட்ட பொருட்களில் கரம் மசாலா, நெய், மலாய், பட்டர் கார்லிக் நான் மற்றும் கீமா ஆகியவை இந்தியாவில் சிறந்த ரேட்டிங் பெற்ற உணவுகளாகும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website