உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! வைரலாகும் பதிவு

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலக பெரும் பணக்காரராரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை சமீபத்தில் கைவிட்டார்.
டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எலான் மஸ்க் இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; தெளிவாகச் சொல்வதானால், நான் குடியரசுக் கட்சியின் இடது பாதியையும் ஜனநாயகக் கட்சியின் வலது பாதியையும் ஆதரிக்கிறேன் இந்த பதிவை தொடர்ந்து சில நிமிடங்களிலே மற்றொரு பதிவில் நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போகிறேன் என அறிவித்துள்ளார்.
இந்த பதிவு பல லட்சம் லைக்குகளை குவித்து வைரலாகியுள்ளது. உலகின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட்டில் தான் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.