உலக சாதனை படைத்த விராட் கோலி -அதிக ரன்கள்!!நெருங்க முடியாத ரெக்கார்ட்..ரசிகர்கள் கொண்டாட்டம்!

November 2, 2022 at 2:27 pm
pc

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய இனினங்ஸ்:
அடிலைட் மைதானத்தில் பேட்டர்கள் சிறப்பாக செயல்பட முடியும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இதனால் முதலில் களமிறங்கும் இந்திய அணியில் ஓபனர்கள் கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா ஆகியோர் இன்று அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த இருவரும் தொடர்ந்து பெரிய ஸ்கோர் அடித்தது கிடையாது. இன்று அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

நிதான துவக்கம்:
ஓபனர்கள் இருவரும் நிதான துவக்கத்தை தர முடிவு செய்தனர். இதனால், முதல் இரண்டு ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே சென்றது. இதனைத் தொடர்ந்து 2.4ஆவது ஓவரில் டஸ்கின் அகமது வீசிய பந்தில் ரோஹித் அடித்த பந்து சிக்ஸரை நோக்கி பறந்த நிலையில், அதனை ஹசன் முகமது பிடிக்கவில்லை. இதனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரோஹித் அதிரடி காட்டுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், யாரிடம் கேட்சை விட்டாரோ, அதே வீரர் ஹசன் அகமது வீசிய அடுத்த ஓவரிலேயே (3.2) ரோஹித் 2 (8) ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.

கோலி உலக சாதனை:

இதனைத் தொடர்ந்து விராட் கோலி, கே.எல்.ராகுல் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது கோலி 16 ரன்கள் எடுத்திருந்தபோது, டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்களை (1017) வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இதற்குமுன் ஜெயவர்தினே (1016) முதலிடத்தில் இருந்தார். கெய்ல் (965) தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

தற்போது கோலி 18 (15), கே.எல்.ராகுல் 31 (26) ஆகியோர் விளையாடி வருகிறார்கள். இந்தியா 8 ஓவர்களில் 52/1 ரன்களை சேர்த்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website