ஊரே வியக்கும் அளவுக்கு தங்கைக்கு கோடிக்கணக்கில் வரதட்சணை வழங்கிய பாச சகோதரர்கள்!

March 29, 2023 at 9:59 pm
pc

சகோதரியின் திருமணத்திற்கு ராஜஸ்தானின் திங்சாரா கிராமத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் 8 கோடியே 31 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இந்தியாவில் 1961ம் ஆண்டின் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி, வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானின் திங்சாரா கிராமத்தைச் சேர்ந்த 4 சகோதரர்கள் சுமார் 8 கோடியே 31 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்து தங்களுடைய பாச தங்கை பன்வாரி தேவியின் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

அர்ஜுன் ராம் மெஹாரியா, பகீரத் மெஹாரியா, உமைத் ஜி மெஹாரியா மற்றும் பிரஹலாத் மெஹாரியா ஆகிய 4 சகோதரர்கள் மார்ச் 26ம் திகதி சகோதரியின் திருமணத்திற்காக இந்த பெரும் தொகையை செலுத்தியுள்ளனர்.

வரதட்சணை தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, சுமார் ரூ.2.21 கோடி ரொக்கம், 4 கோடி மதிப்பிலான 100 பிகாஸ் நிலம்(bighas of land), மேலும் குதா பகவன்தாஸ் கிராமத்தில் ரூ.50 லட்சத்தில் 1 பிகா நிலம் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரூ.71 லட்சம் மதிப்பில் 1 கிலோவுக்கும் அதிகமான தங்கம், ரூ.9.8 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ வெள்ளி, ரூ.7 லட்சம் மதிப்புள்ள டிராக்டரும் வரதட்சணையின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒட்டகம் மற்றும் காளை மாட்டு வண்டியில் கொண்டு வரப்பட்ட பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களும் மணமகனுக்கு பரிசாக அளித்துள்ளனர்.

இந்த நான்கு சகோதரர்களும் இதுவரை யாரும் கொடுக்காத அளவுக்கு வரதட்சணை கொடுத்து திங்சாரா கிராமத்தில் சரித்திரம் படைத்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website